ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 85


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் மாற்றம் சொற்றொடர்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இந்த வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


I can feel the difference.
என்னால் வித்தியாசத்தை உணர முடிகிறது.

Can you feel the difference?
உங்களால் வித்தியாசத்தை உணர முடிகிறதா?

I can't feel the difference.
என்னால் வித்தியாசத்தை உணர முடிவதில்லை.

Can't you feel the difference?
உங்களால் வித்தியாசத்தை உணர முடிவதில்லையா?

Come and search.
வந்து தேடுங்கள்.

Don't search.
தேட வேண்டாம்.

Start searching.
தேடத் தொடங்குங்கள்.

Stop searching.
தேடுவதை நிறுத்துங்கள்.

I have heard about that.
நான் அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

Have you ever heard about that?
நீங்கள் எப்போதாவது அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

I have never heard about that.
நான் அதைப் பற்றி ஒருபோதும் கேள்விப்பட்டதே இல்லை.

Haven't you heard about that?
நீங்கள் அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லையா?


He uses bad words.
அவன் கெட்ட வார்த்தைகளைப் பாவிக்கிறான்.

Does he use bad words?
அவன் கெட்ட வார்த்தைகளைப் பாவிக்கிறானா?

He doesn't use bad words.
அவன் கெட்ட வார்த்தைகளைப் பாவிப்பதில்லை.

Doesn't he use bad words?
அவன் கெட்ட வார்த்தைகளைப் பாவிப்பதில்லையா?

That is the right way.
அதுவே சரியான வழி.

Is that the right way?
அதுவா சரியான வழி?

That is not the right way.
அது சரியான வழியல்ல.

Isn't that the right way?
அது சரியான வழியல்லவா?

You can at least come and see me.
குறைந்தபட்சம் உங்களால் என்னை வந்து பார்க்க முடியும்.

Can you at least come and see me?
குறைந்தபட்சம் உங்களால் என்னை வந்து பார்க்க முடியுமா?

I can't come and see you.
என்னால் உங்களை வந்து பார்க்க முடியாது.

Can't you at least come and see me?
குறைந்தபட்சம் உங்களால் என்னை வந்து பார்க்க முடியாதா?
Previous Post Next Post