ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 86


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே அவ்வாறான சில ஆங்கில வாக்கியங்கள் மாற்றம் சொற்றொடர்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இந்த வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Kids are scared of animals.
குழந்தைகள் விலங்குகளுக்கு பயப்படுகிறார்கள்.

Are kids scared of animals?
குழந்தைகள் விலங்குகளுக்கு பயப்படுகிறார்களா?

Kids are not scared of animals.
குழந்தைகள் விலங்குகளுக்கு பயப்படுவதில்லை.

Aren't kids scared of animals?
குழந்தைகள் விலங்குகளுக்கு பயப்படுவதில்லையா?

I have a very important meeting today.
எனக்கு இன்று மிக முக்கியமான ஒரு கூட்டம் உள்ளது.

Do you have any meetings today?
உங்களுக்கு இன்று ஏதேனும் கூட்டங்கள் இருக்கின்றனவா?

I don't have any meetings today.
எனக்கு இன்று கூட்டங்கள் எதுவும் இல்லை.

Don't you have any meetings today?
உங்களுக்கு இன்று கூட்டங்களும் எதுவும் இல்லையா?

You should trust him.
நீங்கள் அவரை நம்ப வேண்டும்.

Should I trust him?
நான் அவரை நம்ப வேண்டுமா?

You should not trust him.
நீங்கள் அவரை நம்பக்கூடாது.

Shouldn't I trust him?
நான் அவரை நம்பக்கூடாதா?


They will surely call us.
அவர்கள் நிச்சயமாக எங்களை அழைப்பார்கள்.

Will they surely call us?
அவர்கள் நிச்சயமாக எங்களை அழைப்பார்களா?

They will not call us.
அவர்கள் எங்களை அழைக்க மாட்டார்கள்.

Won't they call us?
அவர்கள் எங்களை அழைக்க மாட்டார்களா?

My friend can ask anything from me.
எனது நண்பன் என்னிடம் எதையும் கேட்க முடியும்.

Can your friend ask anything from you?
உங்கள் நண்பன் உங்களிடம் எதையும் கேட்க முடியுமா?

My friend can't ask anything from me.
எனது நண்பன் என்னிடம் எதையும் கேட்க முடியாது.

Can't your friend ask anything from you?
உங்கள் நண்பன் உங்களிடம் எதையும் கேட்க முடியாதா?

You know how to talk to your parents.
உங்கள் பெற்றோருடன் எப்படிப் பேசுவது என்று உங்களுக்குத் தெரியும்.

Do you know how to talk to your parents?
உங்கள் பெற்றோருடன் எப்படிப் பேசுவது என்று உங்களுக்குத் தெரியுமா?

You don't know how to talk to your parents.
உங்கள் பெற்றோருடன் எப்படிப் பேசுவது என்று உங்களுக்குத் தெரியாது.

Don't you know how to talk to your parents?
உங்கள் பெற்றோருடன் எப்படிப் பேசுவது என்று உங்களுக்குத் தெரியாதா?
Previous Post Next Post