ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 93


'ஆங்கிலத்தில் பேசுவோம்'
எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தினமும் ஒவ்வொரு பகுதிகளாக தொகுத்து வழங்கி வருகிறோம். இங்கே அவ்வாறான சில சொற்றொடர்களும், வாக்கியங்களும் தரப்பட்டுள்ளன.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலையை பொருத்து நீங்கள் பயன்படுத்த முடியும்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Whatever
என்னவாயினும்

Whichever
எதுவாயினும்

Whoever
யாராயினும்

Wherever
எங்கேயாயினும்

Whenever
எப்பொழுதாயினும்

However
எவ்வாறாயினும்

He created it.
அவன் அதை உருவாக்கினான்.

Did he create it?
அவன் அதை உருவாக்கினானா?

He didn't create it.
அவன் அதை உருவாக்கவில்லை.

Didn't he create it?
அவன் அதை உருவாக்கவில்லையா?

I will explain it to you.
நான் அதை உங்களுக்கு விளக்குவேன்.

Will you explain it to me?
நீங்கள் அதை எனக்கு விளக்குவீர்களா?

I won't explain it to you.
நான் அதை உங்களுக்கு விளக்க மாட்டேன்.

Won't you explain it to me?
நீங்கள் அதை எனக்கு விளக்க மாட்டீர்களா?


They should understand each other.
அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.

Should we understand each other?
நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டுமா?

They should not understand each other.
அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக் கூடாது.

Shouldn't we understand each other?
நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக் கூடாதா?

She did it purposely.
அவள் அதை வேண்டுமென்றே செய்தாள்.

Did she do it purposely?
அவள் அதை வேண்டுமென்றே செய்தாளா?

She didn't do it purposely.
அவள் அதை வேண்டுமென்றே செய்யவில்லை.

Didn't she do it purposely?
அவள் அதை வேண்டுமென்றே செய்யவில்லையா?

He gives money.
அவர் பணம் தருகிறார்.

Does he give money?
அவர் பணம் தருகிறாரா?

He doesn't give money.
அவர் பணம் தருவதில்லை.

Doesn't he give money? 
அவர் பணம் தருவதில்லையா?
Previous Post Next Post