ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 96


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் உரையாடும் போது பயன்படக்கூடிய சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் தினமும் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி எடுக்க வேண்டும். அதற்காக இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் பயன்படுத்த முடியும்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


I can bring the rope.
என்னால் கயிற்றைக் கொண்டு வர முடியும்.

Can you bring the rope?
உங்களால் கயிற்றைக் கொண்டு வர முடியுமா?

I can't bring the rope.
என்னால் கயிற்றைக் கொண்டு வர முடியாது.

Can't you bring the rope?
உங்களால் கயிற்றைக் கொண்டு வர முடியாதா?

Why can't you bring the rope?
ஏன் உங்களால் கயிற்றைக் கொண்டு வர முடியாது?

He mentioned my name.
அவர் எனது பெயரைக் குறிப்பிட்டார்.

Did he mention your name?
அவர் உங்கள் பெயரைக் குறிப்பிட்டாரா?

Where did he mention your name?
அவர் உங்கள் பெயரை எங்கே குறிப்பிட்டார்?

He didn't mention my name.
அவர் எனது பெயரைக் குறிப்பிடவில்லை.

Didn't he mention your name?
அவர் உங்கள் பெயரைக் குறிப்பிடவில்லையா?

Why didn't he mention your name?
ஏன் அவர் உங்கள் பெயரைக் குறிப்பிடவில்லை?

This is for your benefit.
இது உங்கள் நலனுக்காக.

Is this for my benefit?
இது எனது நலனுக்காகவா?

This is not for my benefit.
இது எனது நலனுக்காக அல்ல.

Isn't this for your benefit?
இது உங்கள் நலனுக்காக அல்லவா?


They ruled our country.
அவர்கள் எங்கள் நாட்டை ஆட்சி செய்தார்கள்.

Did they rule our country?
அவர்கள் எங்கள் நாட்டை ஆட்சி செய்தார்களா?

When did they rule our country?
அவர்கள் எப்போது எங்கள் நாட்டை ஆட்சி செய்தார்கள்?

They didn't rule our country.
அவர்கள் எங்கள் நாட்டை ஆட்சி செய்யவில்லை.

Didn't they rule our country?
அவர்கள் எங்கள் நாட்டை ஆட்சி செய்யவில்லையா?

I will tell about him.
நான் அவனைப் பற்றி கூறுவேன்.

Will you tell about him?
நீங்கள் அவனைப் பற்றி கூறுவீர்களா?

I won't tell about him.
நீங்கள் அவனைப் பற்றி கூற மாட்டேன்.

Won't you tell about him?
நீங்கள் அவனைப் பற்றி கூற மாட்டீர்களா?

They believe you.
அவர்கள் உங்களை நம்புகிறார்கள்.

Do they believe me?
அவர்கள் என்னை நம்புகிறார்களா?

They don't believe you.
அவர்கள் உங்களை நம்புவதில்லை.

Don't they believe me?
அவர்கள் என்னை நம்புவதில்லையா?

Don't they believe you?
அவர்கள் உங்களை நம்புவதில்லையா?

Why don't they believe you?
ஏன் அவர்கள் உங்களை நம்புவதில்லை?
Previous Post Next Post