ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 97


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள், இந்த வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களின் நேரடி தமிழ் அர்த்தம் இல்லையெனினும், அவற்றினால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழே தரப்பட்டுள்ளவாறே அமையப்பெறும்.


Let's start.
தொடங்குவோம் / ஆரம்பிப்போம்.

Let's work.
வேலை செய்வோம்.

Let's play.
விளையாடுவோம்.

Let's cook.
சமைப்போம்.

Let's eat.
சாப்பிடுவோம்.

Let's talk to them.
அவர்களுடன் பேசுவோம்.

It is a free course.
அது ஒரு இலவச கற்கைநெறி.

Is it a free course?
அது ஒரு இலவச கற்கைநெறியா?

It is not a free course.
அது ஒரு இலவச கற்கைநெறியல்ல.

Isn't it a free course?
அது ஒரு இலவச கற்கைநெறியல்லவா?

You can start a business.
உங்களால் ஒரு வியாபாரத்தை தொடங்க முடியும்.

Can you start a business?
உங்களால் ஒரு வியாபாரத்தை தொடங்க முடியுமா?

You can't start a business.
உங்களால் ஒரு வியாபாரத்தை தொடங்க முடியாது.

Can't you start a business?
உங்களால் ஒரு வியாபாரத்தை தொடங்க முடியாதா?

Why can't you start a business?
ஏன் உங்களால் ஒரு வியாபாரத்தை தொடங்க முடியாது?


This is the main gate.
இதுவே பிரதான நுழைவாயில்.

Is this the main gate?
இது பிரதான நுழைவாயிலா?

Where is the main gate?
பிரதான நுழைவாயில் எங்கே உள்ளது?

This is not the main gate.
இது பிரதான நுழைவாயில் அல்ல.

Isn't this the main gate?
இது பிரதான நுழைவாயில் அல்லவா?

I will sell this online.
இதை நான் இணையத்தில் (ஆன்லைனில்) விற்பனை செய்வேன்.

Will you sell this online?
இதை நீங்கள் இணையத்தில் விற்பனை செய்வீர்களா?

I won't sell this online.
இதை நான் இணையத்தில் விற்பனை செய்ய மாட்டேன்.

Won't you sell this online?
இதை நீங்கள் இணையத்தில் விற்பனை செய்ய மாட்டீர்களா?

That is the right method.
அதுவே சரியான முறை.

Is that the right method?
அது சரியான முறையா?

That is not the right method.
அது சரியான முறையல்ல.

Isn't that the right method?
அது சரியான முறையல்லவா?
Previous Post Next Post