ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 98


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள், இந்த வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களின் நேரடி தமிழ் அர்த்தம் இல்லையெனினும், அவற்றினால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழே தரப்பட்டுள்ளவாறே அமையப்பெறும்.


International media.
சர்வதேச ஊடகங்கள்.

International newspapers.
சர்வதேச நாளிதழ்கள்.

International magazines.
சர்வதேச சஞ்சிகைகள்.

Radio broadcast stations.
வானொலி ஒலிபரப்பு நிலையங்கள்.

Television channels.
தொலைக்காட்சி அலைவரிசைகள்.

I asked him directly.
நான் அவரிடம் நேரடியாகக் கேட்டேன்.

Did you ask him directly?
நீங்கள் அவரிடம் நேரடியாகக் கேட்டீர்களா?

I didn't ask him directly.
நான் அவரிடம் நேரடியாகக் கேட்கவில்லை.

Didn't you ask him directly?
நீங்கள் அவரிடம் நேரடியாகக் கேட்கவில்லையா?

That was a misinformation.
அது ஒரு தவறான தகவல்.

Was that a misinformation?
அது ஒரு தவறான தகவலா?

That was not a misinformation.
அது ஒரு தவறான தகவல் அல்ல.

Wasn't that a misinformation?
அது ஒரு தவறான தகவல் அல்லவா?


She fell on the floor.
அவள் தரையில் விழுந்தாள்.

Did she fall on the floor?
அவள் தரையில் விழுந்தாளா?

She didn't fall on the floor.
அவள் தரையில் விழவில்லை.

Didn't she fall on the floor?
அவள் தரையில் விழவில்லையா?

It is your duty to protect them.
அவர்களைப் பாதுகாப்பது உங்கள் கடமை.

Is it my duty to protect them?
அவர்களைப் பாதுகாப்பது எனது கடமையா?

It is not my duty to protect them.
அவர்களைப் பாதுகாப்பது எனது கடமையல்ல.

Isn't it your duty to protect them?
அவர்களைப் பாதுகாப்பது எனது கடமையல்லவா?

He replied me.
அவர் எனக்கு பதிலளித்தார்.

Did he reply you?
அவர் உங்களுக்கு பதிலளித்தாரா?

He didn't reply me.
அவர் எனக்கு பதிலளிக்கவில்லை.

Didn't he reply you?
அவர் உங்களுக்கு பதிலளிக்கவில்லையா?
Previous Post Next Post