ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 99


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஆங்கிலத்தில் கதைக்கப் பயிற்சி எடுத்தே ஆக வேண்டும். ஆங்கிலத்தில் கதைக்க எந்தளவுக்கு பயிற்சி எடுக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களால் ஆங்கிலத்தில் கதைக்க முடிகிறது.

ஆங்கிலத்தில் கதைக்கும் போது இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களின் நேரடி தமிழ் அர்த்தம் இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழே தரப்பட்டுள்ளவாறே அமையப்பெறும்.


Who is there?
யார் அங்கே உள்ளார்?

There is nobody here.
இங்கே யாரும் இல்லை.

Is there anybody?
யாராவது இருக்கிறார்களா?

There is somebody.
யாரோ ஒருவர் இருக்கிறார்.

His life is in danger. 
அவரது உயிர் ஆபத்தில் உள்ளது.

Is his life in danger?
அவரது உயிர் ஆபத்தில் உள்ளதா?

His life is not in danger.
அவரது உயிர் ஆபத்தில் இல்லை.

Isn't his life in danger?
அவரது உயிர் ஆபத்தில் இல்லையா?

They talk about us.
அவர்கள் எங்களைப் பற்றி பேசுகிறார்கள்.

Do they talk about us?
அவர்கள் எங்களைப் பற்றி பேசுகிறார்களா?

They don't talk about us.
அவர்கள் எங்களைப் பற்றி பேசுவதில்லை.

Don't they talk about us?
அவர்கள் எங்களைப் பற்றி பேசுவதில்லையா?


She interrupted.
அவள் குறுக்கிட்டாள்.

Did she interrupt?
அவள் குறுக்கிட்டாளா?

She didn't interrupt.
அவள் குறுக்கிடவில்லை.

Didn't she interrupt?
அவள் குறுக்கிடவில்லையா?

We were able to do that.
எங்களால் அதை செய்ய முடிந்தது.

Were you able to do that?
உங்களால் அதை செய்ய முடிந்ததா?

We were not able to do that.
எங்களால் அதைச் செய்ய முடியவில்லை.

Weren't you able to do that?
உங்களால் அதைச் செய்ய முடியவில்லையா?

There is a similarity.
ஒரு ஒற்றுமை உள்ளது.

Are there any similarities.
எதாவது ஒற்றுமைகள் இருக்கின்றனவா?

There is no similarity.
எந்த ஒற்றுமையும் இல்லை.

Aren't there any similarities?
ஒற்றுமைகள் எதுவும் இல்லையா?
Previous Post Next Post