ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 100


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

இது 'ஆங்கிலத்தில் பேசுவோம்' பகுதியின் 100 ஆவது பதிவாகும். இதுவரையில் 1500 இற்கும் அதிகமான ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் இங்கே பதிவிடப்பட்டுள்ளன. அவற்றை முன்னைய பதிவுகளில் நீங்கள் பார்வையிடலாம்.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஆங்கிலத்தில் கதைக்கப் பயிற்சி எடுத்தே ஆக வேண்டும். ஆங்கிலத்தில் கதைக்க எந்தளவுக்கு பயிற்சி எடுக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களால் ஆங்கிலத்தில் கதைக்க முடிகிறது.

ஆங்கிலத்தில் கதைக்கும் போது இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களின் நேரடி தமிழ் அர்த்தம் இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழே தரப்பட்டுள்ளவாறே அமையப்பெறும்.


Tell me.
என்னிடம் கூறுங்கள்.

Don't tell me.
என்னிடம் கூற வேண்டாம்.

Tell us.
எங்களிடம் கூறுங்கள்.

Don't tell us.
எங்களிடம் கூற வேண்டாம்.

Tell them.
அவர்களிடம் கூறுங்கள்.

Don't tell them.
அவர்களிடம் கூற வேண்டாம்.

There is a direct way.
ஒரு நேரடியான வழி உள்ளது.

Is there a direct way?
ஒரு நேரடியான வழி உள்ளதா?

There is no direct way.
நேரடியான வழி இல்லை.

Isn't there a direct way?
ஒரு நேரடியான வழி இல்லையா?

It is permitted here.
இது இங்கே அனுமதிக்கப்பட்டுள்ளது.

Is it permitted here?
இது இங்கே அனுமதிக்கப்பட்டுள்ளதா?

It is not permitted here.
இது இங்கே அனுமதிக்கப்படுவதில்லை.

Isn't it permitted here?
இது இங்கே அனுமதிக்கப்படுவதில்லையா?


He used this before.
அவர் இதை முன்னர் பயன்படுத்தினார்.

Did he use this before?
அவர் இதை முன்னர் பயன்படுத்தினாரா?

He didn't use this before.
அவர் இதை முன்னர் பயன்படுத்தவில்லை.

Didn't he use this before?
அவர் இதை முன்னர் பயன்படுத்தவில்லையா?

This is what happens here.
இங்கே நடப்பது இதுதான்.

Is this what happens here?
இங்கே நடப்பது இதுதானா?

This is not what happens here.
இங்கே நடப்பது இதுவல்ல.

Isn't this what happens here?
இங்கே நடப்பது இதுவல்லவா?

They are away from reality.
அவர்கள் யதார்த்தத்திலிருந்து தூரமாக இருக்கிறார்கள்.

Are they away from reality?
அவர்கள் யதார்த்தத்திலிருந்து தூரமாக இருக்கிறார்களா?

They are not away from reality.
அவர்கள் யதார்த்தத்திலிருந்து தூரமாக இல்லை.

Aren't they away from reality?
அவர்கள் யதார்த்தத்திலிருந்து தூரமாக இல்லையா?
Previous Post Next Post