ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 101


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஆங்கிலத்தில் கதைக்க பயிச்சி செய்ய வேண்டும். நீங்கள் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி செய்யும் அளவுக்கு உங்களால் ஆங்கிலத்தில் கதைக்க முடிகிறது. 

ஆங்கிலத்தில் கதைக்கும் போது இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களையும், சொற்றொடர்களையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.

இவ்வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றினால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Two times more
இரண்டு மடங்கு அதிகமாக

Three times more
மூன்று மடங்கு அதிகமாக

Five times more
ஐந்து மடங்கு அதிகமாக

Ten times more
பத்து மடங்கு அதிகமாக

Hundred times more
நூறு மடங்கு அதிகமாக

Thousand times more
ஆயிரம் மடங்கு அதிகமாக

You should search that.
நீங்கள் அதைத் தேட வேண்டும்.

Should you search that?
நீங்கள் அதைத் தேட வேண்டுமா?

You should not search that.
நீங்கள் அதைத் தேடக் கூடாது.

Shouldn't you search that?
நீங்கள் அதைத் தேடக் கூடாதா?

They published the news.
அவர்கள் செய்தியை பிரசுரித்தனர்.

Did they publish the news?
அவர்கள் செய்தியை பிரசுரித்தனரா?

They didn't publish the news.
அவர்கள் செய்தியை பிரசுரிக்கவில்லை.

Didn't they publish the news?
அவர்கள் செய்தியை பிரசுரிக்கவில்லையா?


The vehicle approaches us.
வாகனம் எங்களை நெருங்குகிறது.

Does the vehicle approach us?
வாகனம் எங்களை நெருங்குகிறதா?

The vehicle doesn't approach us.
வாகனம் எங்களை நெருங்குவதில்லை.

Doesn't the vehicle approach us?
வாகனம் எங்களை நெருங்குவதில்லையா?

They asked him many questions.
அவர்கள் அவனிடம் பல கேள்விகளைக் கேட்டார்கள்.

Did they ask him many questions?
அவர்கள் அவனிடம் பல கேள்விகளைக் கேட்டார்களா?

They didn't ask him any questions.
அவர்கள் அவனிடம் எந்தக் கேள்விகளையும் கேற்கவில்லை.

Didn't they ask him any questions?
அவர்கள் அவனிடம் எந்தக் கேள்விகளையும் கேற்கவில்லையா?

We have a shop nearby.
எங்களுக்கு அருகாமையில் ஒரு கடை உள்ளது.

Do we have a shop nearby?
எங்களுக்கு அருகாமையில் ஒரு கடை உள்ளதா?

We don't have a shop nearby.
எங்களுக்கு அருகாமையில் ஒரு கடை இல்லை.

Don't we have a shop nearby?
எங்களுக்கு அருகாமையில் ஒரு கடை இல்லையா?
Previous Post Next Post