ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 103


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே அவ்வாறான சில வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன.

அடிப்படையில் இருந்து ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி எடுத்தே ஆக வேண்டும். எந்தளவுக்கு பயிச்சி செய்கிறோமோ, அந்தளவிற்கு உங்களால் பேச முடிகிறது. 

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Like a baby
ஒரு குழந்தையை போல

Like an animal
ஒரு மிருகத்தை போல

Like a bird
ஒரு பறவையை போல

Like a tree
ஒரு மரத்தை போல

Like us
எங்களைப் போல

Unlike us
எங்களைப் போலன்றி

Like you
உங்களைப் போல

Unlike you
உங்களைப் போலன்றி

Be like your friends.
உங்கள் நண்பர்களைப் போல இருங்கள்.

Don't be like your friends.
உங்கள் நண்பர்களைப் போல இருக்க வேண்டாம்.

I cannot be like him.
என்னால் அவனைப் போல இருக்க முடியாது.

You are like your father.
நீங்கள் உங்கள் தந்தையைப் போல இருக்கிறீர்கள்.

The flight landed safely.
விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

Did the flight land safely?
விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதா?

The flight didn't land safely.
விமானம் பாதுகாப்பாக தரையிறங்கவில்லை.

Didn't the flight land safely?
விமானம் பாதுகாப்பாக தரையிறங்கவில்லையா?

We know who you are.
நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியும்.

Do you know who we are?
நாங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?

We don't know who you are.
நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாது.

Don't you know who we are?
நாங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியாதா?


He can do that with my permission.
அவர் என் அனுமதியுடன் அதை செய்ய முடியும்.

Can he do that without your permission?
உங்கள் அனுமதியின்றி அவரால் அதைச் செய்ய முடியுமா?

He can't do that without my permission.
எனது அனுமதியின்றி அவரால் அதைச் செய்ய முடியாது.

Can't he do that with your permission?
உங்கள் அனுமதியுடன் அவரால் அதைச் செய்ய முடியாதா?

He willingly did that.
அவர் விருப்பத்துடன் அதைச் செய்தார்.

Did he willingly do that?
அவர் விருப்பத்துடன் அதைச் செய்தாரா?

He did not do that willingly?
அவர் விருப்பத்துடன் அதைச் செய்யவில்லை?

Didn't he do that willingly?
அவர் விருப்பத்துடன் அதைச் செய்யவில்லையா?

You have that right.
உங்களுக்கு அந்த உரிமை உண்டு.

Do you have that right?
உங்களுக்கு அந்த உரிமை இருக்கிறதா?

You don't have that right.
உங்களுக்கு அந்த உரிமை இல்லை.

Don't you have that right?
உங்களுக்கு அந்த உரிமை இல்லையா?
Previous Post Next Post