ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 104


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை ஒவ்வொரு பகுதிகளாக தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி எடுத்தே ஆக வேண்டும். நீங்கள் எந்தளவுக்கு ஆங்கிலத்தில் கதைக்கப் பயிற்சி செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களால் விரைவாகவும், பிழையின்றியும் ஆங்கிலத்தில் கதைக்க முடிகிறது.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Natural foods
இயற்கை உணவுகள்

Artificial foods
செயற்கை உணவுகள்

Unnatural things
இயற்கைக்கு மாறான விடயங்கள்

True feelings
உண்மையான உணர்வுகள்

Good knowledge
நல்ல அறிவு

Poor knowledge
குறைந்த அறிவு

They took a decision.
அவர்கள் ஒரு முடிவை எடுத்தார்கள்.

Did they take a decision?
அவர்கள் ஒரு முடிவை எடுத்தார்களா?

They didn't take a decision.
அவர்கள் ஒரு முடிவை எடுக்கவில்லை.

Didn't they take a decision?
அவர்கள் ஒரு முடிவை எடுக்கவில்லையா?

You can compare both of them.
உங்களால் அவை இரண்டையும் ஒப்பிட முடியும்.

Can you compare both of them?
உங்களால் அவை இரண்டையும் ஒப்பிட முடியுமா?

You can't compare both of them.
உங்களால் அவை இரண்டையும் ஒப்பிட முடியாது.

Can't you compare both of them?
உங்களால் அவை இரண்டையும் ஒப்பிட முடியாதா?


It is a miracle.
அது ஒரு அதிசயம்.

Is it a miracle?
அது ஒரு அதிசயமா?

It is not a miracle.
அது ஒரு அதிசயமல்ல.

Isn't it a miracle?
அது ஒரு அதிசயமல்லவா?

That is your mistake.
அது உங்கள் தவறு.

Is that your mistake?
அது உங்கள் தவறா?

That is not your mistake.
அது உங்கள் தவறல்ல.

Isn't that your mistake?
அது உங்கள் தவறல்லவா?

I will speak on behalf of you.
நான் உங்கள் சார்பாக பேசுவேன்.

Will you speak on behalf of me?
நீங்கள் என் சார்பாக பேசுவீர்களா?

I will not speak on behalf you.
நான் உங்கள் சார்பாக பேச மாட்டேன்.

Won't you speak on behalf of me?
நீங்கள் என் சார்பாக பேசமாட்டீர்களா?
Previous Post Next Post