ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 106


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை ஒவ்வொரு பகுதிகளாக தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஆங்கிலத்தில் சரளமாகக் கதைக்க வேண்டுமெனில் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி எடுக்க வேண்டும். இங்கே தரப்படும் வாக்கியங்களையும் நீங்கள் அதற்காக பயன்படுத்த முடியும்.

இவ்வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


It is compulsory to attend the meeting.
கூட்டத்தில் கலந்துகொள்வது கட்டாயமாகும்.

Is it compulsory to attend the meeting?
கூட்டத்தில் கலந்துகொள்வது கட்டாயமா?

It is not compulsory to attend the meeting.
கூட்டத்தில் கலந்துகொள்வது கட்டாயமில்லை.

Isn't it compulsory to attend the meeting?
கூட்டத்தில் கலந்துகொள்வது கட்டாயமில்லையா?

He disappeared in Dubai.
அவன் துபாயில் காணாமல் போனான்.

Did he disappear in Dubai?
அவன் துபாயில் காணாமல் போனானா?

He didn't disappear in Dubai.
அவன் துபாயில் காணாமல் போகவில்லை.

Didn't he disappear in Dubai?
அவன் துபாயில் காணாமல் போகவில்லையா?


You broke the rules.
நீங்கள் விதிகளை மீறினீர்கள்.

Did you break the rules?
நீங்கள் விதிகளை மீறினீர்களா?

I didn't break the rules.
நான் விதிகளை மீறவில்லை.

Didn't you break the rules?
நீங்கள் விதிகளை மீறவில்லையா?

The time has come to leave this place.
இந்த இடத்தை விட்டு வெளியேறும் நேரம் வந்துவிட்டது.

Is it the right time to leave this place?
இந்த இடத்தை விட்டு வெளியேற இது சரியான நேரமா?

The time has not come yet to leave this place.
இந்த இடத்தை விட்டு வெளியேறும் நேரம் இன்னும் வரவில்லை.

Isn't it the right time to leave this place?
இந்த இடத்தை விட்டு வெளியேற இது சரியான நேரம் அல்லவா?

I have been ordered to do that.
அதைச் செய்ய எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Have you been ordered to do that?
அதைச் செய்ய உங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதா?

I have not been ordered to do that.
அதைச் செய்ய எனக்கு உத்தரவிடப்பட்டு இல்லை.

Haven't you been ordered to do that?
அதைச் செய்ய உங்களுக்கு உத்தரவிடப்பட்டு இல்லையா?
Previous Post Next Post