ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 107


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை ஒவ்வொரு பகுதிகளாக தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்களில் சிலருக்கு ஆங்கிலத்தில் பேசுவதில் தயக்கம் இருக்கலாம். உங்களுக்கான ஒரு பதிவை ஆங்கிலம் பேசுவதில் தயக்கம் உள்ளதா? எனும் தலைப்பில் எமது இணையதளத்தில் பதிவிட்டிருந்தோம். அதனை இன்னும் வாசிக்கத்தவர்கள் மேலே தரப்பட்டுள்ள தலைப்பினுள் சென்று அதனை வாசிக்க முடியும்.

முன்னைய பதிவுகளைப் போன்று அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் உரையாடும் போது பயன்படக்கூடிய சில வாக்கியங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இவற்றை நீங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்த முடியும்.

இங்கே தரப்பட்டுள்ள சில ஆங்கில வாக்கியங்களின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும் அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Keep walking.
நடந்து கொண்டே இருங்கள்.

Keep running.
ஓடிக் கொண்டே இருங்கள்.

Keep talking.
பேசிக் கொண்டே இருங்கள்.

Keep watching.
பார்த்துக் கொண்டே இருங்கள்.

Keep thinking.
யோசித்துக் கொண்டே இருங்கள்.

Keep following.
பின்தொடர்ந்து கொண்டே இருங்கள்.

Please tell me that.
தயவுசெய்து அதை என்னிடம் கூறுங்கள்.

Please don't tell me that.
தயவுசெய்து அதை என்னிடம் கூற வேண்டாம்.

Why don't you tell me that.
ஏன் நீங்கள் அதை என்னிடம் கூறுவதில்லை?

You didn't tell me that.
நீங்கள் அதை என்னிடம் கூறவில்லை.

Why didn't you tell me that.
ஏன் நீங்கள் அதை என்னிடம் கூறவில்லை?

Why can't you tell me that.
ஏன் உங்களால் அதை என்னிடம் கூற முடியாது?

You should tell me that.
நீங்கள் அதை என்னிடம் கூற வேண்டும்.

Why shouldn't you tell me that?
ஏன் நீங்கள் அதை என்னிடம் கூறக் கூடாது?


He is going to be here tonight.
அவர் இன்றிரவு இங்கே இருக்கப் போகிறார்.

He is not going to be here tonight.
அவர் இன்றிரவு இங்கே இருக்கப் போவதில்லை.

Why is he going to be here tonight?
ஏன் அவர் இன்றிரவு இங்கே இருக்கப் போகிறார்?

He was there last night.
நேற்றிரவு அவர் அங்கு இருந்தார்.

Was he there last night?
நேற்றிரவு அவர் அங்கு இருந்தாரா?

He was not there last night.
நேற்றிரவு அவர் அங்கு இருக்கவில்லை.

Wasn't he there last night? 
நேற்றிரவு அவர் அங்கு இருக்கவில்லையா?

I can do this alone.
என்னால் இதை தனியாக செய்ய முடியும்.

Can you do this alone?
உங்களால் இதை தனியாக செய்ய முடியுமா?

How can I do this alone?
எப்படி நான் இதை தனியாக செய்ய முடியும்?

I can't do this alone.
என்னால் இதை தனியாக செய்ய முடியாது.

Can't you do this alone?
உங்களால் இதை தனியாக செய்ய முடியாதா?

Why can't you do this alone?
ஏன் உங்களால் இதை தனியாக செய்ய முடியாது?
Previous Post Next Post