ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 109


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை ஒவ்வொரு பகுதிகளாக தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே தரப்பட்டுள்ள சில ஆங்கில வாக்கியங்களின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும் அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


These days
இந்த நாட்கள்

Those days
அந்த நாட்கள்

Before next year
அடுத்த வருடத்துக்கு முன்னர்

After this year
இந்த வருடத்துக்குப் பிறகு

Within this year
இந்த வருடத்தினுள்

Ten years before
பத்து வருடங்களுக்கு முன்பு

After ten years
பத்து வருடங்களுக்குப் பிறகு

Next few years
அடுத்த சில வருடங்கள்

Two months before
இரண்டு மாதங்களுக்கு முன்பு

Next few months
அடுத்த சில மாதங்கள்

Next two days
அடுத்த இரண்டு நாட்கள்

Next few days
அடுத்த சில நாட்கள்

Last few days
கடந்த சில நாட்கள்

I doubt him.
நான் அவனை சந்தேகிக்கிறேன்.

Do you doubt him?
நீங்கள் அவனை சந்தேகிக்கிறீர்களா?

I don't doubt him.
நான் அவனை சந்தேகிப்பதில்லை.

Don't you doubt him?
நீங்கள் அவனை சந்தேகிப்பதில்லையா?

He has a doubt.
அவருக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது.

Does he have any doubt?
அவருக்கு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?

He doesn't have any doubt.
அவருக்கு எந்த சந்தேகமும் இல்லை.

Doesn't he have any doubt?
அவருக்கு எந்த சந்தேகமும் இல்லையா?


They can decide now.
அவர்களால் இப்போது தீர்மானிக்க முடியும்.

Can they decide now?
அவர்களால் இப்போது தீர்மானிக்க முடியுமா?

They can't decide now.
அவர்களால் இப்போது தீர்மானிக்க முடியாது.

Can't they decide now?
அவர்களால் இப்போது தீர்மானிக்க முடியாதா?

Where is your car?
உங்கள் கார் எங்கே?

Someone has stolen my car.
எனது காரை யாரோ திருடி இருக்கிறார்.

I don't have a car now.
இப்போது என்னிடம் ஒரு கார் இல்லை.

Who stole your car?
உங்கள் காரை திருடியது யார்?

It was hidden there.
அது அங்கே மறைக்கப்பட்டது.

Was it hidden there?
அது அங்கே மறைக்கப்பட்டதா?

It was not hidden there.
அது அங்கே மறைக்கப்படவில்லை.

Wasn't it hidden there?
அது அங்கே மறைக்கப்படவில்லையா?
Previous Post Next Post