ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 117


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தினமும் தொகுத்து வழங்கி வருகிறோம். இங்கே அவ்வாறான சில சொற்றொடர்களும், வாக்கியங்களும் தரப்பட்டுள்ளன.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலையை பொருத்து நீங்கள் பயன்படுத்த முடியும்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Don't shout.
கத்த வேண்டாம்.

Don't forget.
மறக்க வேண்டாம்.

Don't jump.
குதிக்க வேண்டாம்.

Don't cut.
வெட்ட வேண்டாம்.

Don't remove.
அகற்ற வேண்டாம்.

Don't talk.
கதைக்க வேண்டாம்.

He was protected by us.
அவர் எங்களால் பாதுகாக்கப்பட்டார்.

Was he protected by you?
அவர் உங்களால் பாதுகாக்கப்பட்டாரா?

He was not protected by you.
அவர் உங்களால் பாதுகாக்கப்படவில்லை.

Wasn't he protected by us?
அவர் எங்களால் பாதுகாக்கப்படவில்லையா?

You should worry about that.
நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும்.

Should I worry about that?
நான் அதைப் பற்றி கவலைப்பட வேண்டுமா?

Why should I worry about that?
ஏன் அதைப் பற்றி நான் கவலைப்பட வேண்டும்?

You shouldn't worry about that.
நீங்கள் அதைப் பற்றி கவலைப்படக்கூடாது.

Shouldn't I worry about that?
நான் அதைப் பற்றி கவலைப்படக்கூடாதா?


I will call the police.
நான் போலீஸை அழைப்பேன்.

Will you call the police?
நீங்கள் போலீஸை அழைப்பீர்களா?

I won't call the police.
நான் போலீஸை அழைக்க மாட்டேன்.

Won't you call the police?
நீங்கள் போலீஸை அழைக்க மாட்டீர்களா?

Don't call the police.
போலீஸை அழைக்க வேண்டாம்.

Why don't you call the police?
ஏன் நீங்கள் போலீஸை அழைப்பதில்லை?

She should be with you.
அவள் உங்களுடன் இருக்க வேண்டும்.

Should she be with you?
அவள் உங்களுடன் இருக்க வேண்டுமா?

She shouldn't be with you.
அவள் உங்களுடன் இருக்கக்கூடாது.

Shouldn't she be with you?
அவள் உங்களுடன் இருக்கக்கூடாதா?

They are responsible for this.
இதற்கு அவர்கள் பொறுப்பு.

Are they responsible for this?
இதற்கு அவர்கள் பொறுப்பா?

They are not responsible for this.
இதற்கு அவர்கள் பொறுப்பல்ல.

Aren't they responsible for this?
இதற்கு அவர்கள் பொறுப்பல்லவா?
Previous Post Next Post