ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 119


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தினமும் தொகுத்து வழங்கி வருகிறோம். இங்கே அவ்வாறான சில சொற்றொடர்களும், வாக்கியங்களும் தரப்பட்டுள்ளன.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலையை பொருத்து நீங்கள் பயன்படுத்த முடியும்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


We have met before.
நாங்கள் இதற்கு முன்னர் சந்தித்து இருக்கிறோம்.

Have we met before?
நாங்கள் இதற்கு முன்னர் சந்தித்து இருக்கிறோமா?

We haven't met before.
நாங்கள் இதற்கு முன்னர் சந்தித்தது இல்லை.

We have never met before.
நாங்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் சந்தித்தது இல்லை.

Haven't we met before?
நாங்கள் இதற்கு முன்னர் சந்தித்தது இல்லையா?

I can leave this place.
என்னால் இந்த இடத்தை விட்டு வெளியேற முடியும்.

Can you leave this place?
உங்களால் இந்த இடத்தை விட்டு வெளியேற முடியுமா?

I can't leave this place.
என்னால் இந்த இடத்தை விட்டு வெளியேற முடியாது.

Can't you leave this place?
உங்களால் இந்த இடத்தை விட்டு வெளியேற முடியாதா?

I have been ordered to do so.
அவ்வாறு செய்ய எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Have you been ordered to do?
அவ்வாறு செய்ய உங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதா?

I have not been ordered to do so.
அவ்வாறு செய்ய எனக்கு உத்தரவிடப்பட்டு இல்லை.

Haven't you been ordered to do so?
அவ்வாறு செய்ய உங்களுக்கு உத்தரவிடப்பட்டு இல்லையா?


He tried to stop them.
அவன் அவர்களைத் தடுக்க முயன்றான்.

Did he try to stop them?
அவன் அவர்களைத் தடுக்க முயன்றானா?

He didn't try to stop them.
அவன் அவர்களைத் தடுக்க முயலவில்லை.

Didn't he try to stop them?
அவன் அவர்களைத் தடுக்க முயலவில்லையா?

Why didn't he try to stop them?
ஏன் அவன் அவர்களைத் தடுக்க முயலவில்லை?

This is the real problem.
இதுதான் உண்மையான பிரச்சினை.

Is this the real problem?
இதுவா உண்மையான பிரச்சினை?

This is not the real problem?
இது உண்மையான பிரச்சினை அல்ல?

Isn't this the real problem?
இது உண்மையான பிரச்சினை அல்லவா?

She has gathered all the information.
அவள் எல்லா தகவல்களையும் சேகரித்துள்ளாள்.

Has she gathered all the information?
அவள் எல்லா தகவல்களையும் சேகரித்துள்ளாளா?

Why has she gathered all the information?
ஏன் அவள் எல்லா தகவல்களையும் சேகரித்துள்ளாளா?

She has not gathered all the information.
அவள் எல்லா தகவல்களையும் சேகரித்து இல்லை.

Hasn't she gathered all the information?
அவள் எல்லா தகவல்களையும் சேகரித்து இல்லையா?
Previous Post Next Post