ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 120


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தினமும் தொகுத்து வழங்கி வருகிறோம். இங்கே அவ்வாறான சில சொற்றொடர்களும், வாக்கியங்களும் தரப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் கட்டாயம் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி எடுக்க வேண்டும். நீங்கள் அதற்காக இங்கே தரப்படும் வாக்கியங்களையும் சந்தர்ப்ப சூழ்நிலையை பொருத்து பயன்படுத்த முடியும்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Look here.
இங்கே பாருங்கள்.

Look there.
அங்கே பாருங்கள்.

Don't look here.
இங்கே பார்க்க வேண்டாம்.

Don't look there.
அங்கே பார்க்க வேண்டாம்.

Don't see that.
அதைப் பார்க்க வேண்டாம்.

Can't see that.
அதைப் பார்க்க முடியாது.

Can see that.
அதைப் பார்க்க முடியும்.

This is my plan.
இது எனது திட்டம்.

Is this your plan?
இது உங்கள் திட்டமா?

This is not my plan.
இது எனது திட்டமல்ல.

Isn't this your plan?
இது உங்கள் திட்டமல்லவா?

She can bring my things.
அவளால் என் பொருட்களை கொண்டு வர முடியும்.

Can she bring my things?
அவளால் என் பொருட்களை கொண்டு வர முடியுமா?

She can't bring my things.
அவளால் என் பொருட்களை கொண்டு வர முடியாது.

Can't she bring my things?
அவளால் என் பொருட்களை கொண்டு வர முடியாதா?


I will find him.
நான் அவனைக் கண்டுபிடிப்பேன்.

Will you find him?
நீங்கள் அவனைக் கண்டுபிடிப்பீர்களா?

You won't find him.
நீங்கள் அவனைக் கண்டுபிடிக்க மாட்டீர்கள்.

Won't I find him?
நான் அவனைக் கண்டுபிடிக்க மாட்டேனா?

Why won't I find him?
ஏன் நான் அவனைக் கண்டுபிடிக்க மாட்டேன்?

You should try again.
நீங்கள் மீண்டும் முயற்சிக்க வேண்டும்.

Should you try again?
நீங்கள் மீண்டும் முயற்சிக்க வேண்டுமா?

You shouldn't try again.
நீங்கள் மீண்டும் முயற்சிக்கக்கூடாது.

Shouldn't you try again?
நீங்கள் மீண்டும் முயற்சிக்கக்கூடாதா?

He told me that you were there.
நீங்கள் அங்கே இருக்கிறீர்கள் என்று அவர் என்னிடம் கூறினார்.

Did he tell you that I was there?
நான் அங்கே இருக்கிறேன் என்று அவர் உங்களிடம் கூறினாரா?

He didn't tell me that you were there.
நீங்கள் அங்கே இருப்பதாக அவர் என்னிடம் கூறவில்லை.

Didn't he tell you that I was there?
நான் அங்கே  இருக்கிறேன் என்று அவர் உங்களிடம் கூறவில்லையா?
Previous Post Next Post