ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 121


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தினமும் தொகுத்து வழங்கி வருகிறோம். இங்கே அவ்வாறான சில சொற்றொடர்களும், வாக்கியங்களும் தரப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் கட்டாயம் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி எடுக்க வேண்டும். நீங்கள் அதற்காக இங்கே தரப்படும் வாக்கியங்களையும் சந்தர்ப்ப சூழ்நிலையை பொருத்து பயன்படுத்த முடியும்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


You can hide them.
உங்களால் அவற்றை மறைக்க முடியும்.

Can you hide them?
உங்களால் அவற்றை மறைக்க முடியுமா?

You can't hide them.
உங்களால் அவற்றை மறைக்க முடியாது.

Can't you hide them?
உங்களால் அவற்றை மறைக்க முடியாதா?

I have some important things to do.
நான் செய்ய வேண்டிய முக்கியமான சில விடயங்கள் உள்ளன.

Do you any important things to do?
நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விடயங்கள் ஏதேனும் உள்ளனவா?

I don't have any important things to do.
நான் செய்ய வேண்டிய முக்கியமான விடயங்கள் எதுவும் இல்லை.

Don't you have any important things to do?
நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விடயங்கள் எதுவும் இல்லையா?

We will see each other.
நாம் ஒருவரை ஒருவர் கண்டுகொள்வோம்.

Will we see each other?
நாம் ஒருவரை ஒருவர் கண்டுகொள்வோமா?

We won't see each other.
நாம் ஒருவரை ஒருவர் கண்டுகொள் மாட்டோம்.

Won't we see each other?
நாம் ஒருவரை ஒருவர் கண்டுகொள் மாட்டோமா?


They are already here.
அவர்கள் ஏற்கனவே இங்கே இருக்கிறார்கள்.

Are they already here?
அவர்கள் ஏற்கனவே இங்கே இருக்கிறார்களா?

They are not here.
அவர்கள் இங்கே இல்லை.

Aren't they here?
அவர்கள் இங்கே இல்லையா?

He was to go there.
அவர் அங்கு செல்லவதற்கு இருந்தார்.

Was he to go there?
அவர் அங்கு செல்லவதற்கு இருந்தாரா?

He was not to go there.
அவர் அங்கு செல்லவதற்கு இருக்கவில்லை.

Wasn't he to go there?
அவர் அங்கு செல்லவதற்கு இருக்கவில்லையா?

I have to work again.
நான் மீண்டும் வேலை செய்ய வேண்டி உள்ளது.

Do I have to work again?
நான் மீண்டும் வேலை செய்ய வேண்டி உள்ளதா?

I don't have to work again.
நான் மீண்டும் வேலை செய்ய வேண்டியது இல்லை.

Don't you have to work again?
நீங்கள் மீண்டும் வேலை செய்ய வேண்டியது இல்லையா?
Previous Post Next Post