ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 122


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதை இலகுவாக்கும் நோக்கில் இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் தரப்படுகின்றன. ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்பட பயன்படுத்த முடியும்.

இங்கே அவ்வாறான சில ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


He did that very carefully.
அவர் அதை மிகவும் கவனமாக செய்தார்.

Did he do that very carefully?
அவர் அதை மிகவும் கவனமாக செய்தாரா?

He didn't do that very carefully.
அவர் அதை மிகவும் கவனமாக செய்யவில்லை.

Didn't he do that very carefully?
அவர் அதை மிகவும் கவனமாக செய்யவில்லையா?

They have contacted him.
அவர்கள் அவனை தொடர்பு கொண்டுள்ளனர்.

Have they contacted him?
அவர்கள் அவனை தொடர்பு கொண்டார்களா?

They have not contacted him.
அவர்கள் அவனை தொடர்பு கொள்ளவில்லை.

Haven't they contacted him?
அவர்கள் அவனை தொடர்பு கொள்ளவில்லையா?

I will find that book.
நான் அந்த புத்தகத்தைக் கண்டுபிடிப்பேன்.

Will I find that book?
நான் அந்த புத்தகத்தைக் கண்டுபிடிப்பேனா?

I won't find that book.
நான் அந்த புத்தகத்தைக் கண்டுபிடிக்க மாட்டேன்.

I will never find that book.
நான் அந்த புத்தகத்தை ஒருபோதும் கண்டுபிடிக்க மாட்டேன்.

Won't I find that book?
நான் அந்த புத்தகத்தைக் கண்டுபிடிக்க மாட்டேனா?


She can come after six weeks.
அவளால் ஆறு வாரங்களுக்குப் பிறகு வர முடியும்.

Can she come after six weeks?
அவளால் ஆறு வாரங்களுக்குப் பிறகு வர முடியுமா?

She can't come after six weeks.
அவளால் ஆறு வாரங்களுக்குப் பிறகு வர முடியாது.

Can't she come after six weeks?
அவளால் ஆறு வாரங்களுக்குப் பிறகு வர முடியாதா?

The teacher may ask you this.
ஆசிரியர் இதை உங்களிடம் கேட்கலாம்.

Why should she ask me that?
ஏன் அவள் அதை என்னிடம் கேட்க வேண்டும்?

Why shouldn't she ask me that?
ஏன் அவள் அதை என்னிடம் கேட்கக்கூடாது?

We are ready to help them.
அவர்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்.

Are you ready to help them?
அவர்களுக்கு உதவ நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

We are not ready to help them.
அவர்களுக்கு உதவ நாங்கள் தயாராக இல்லை.

Aren't you ready to help them?
அவர்களுக்கு உதவ நீங்கள் தயாராக இல்லையா?
Previous Post Next Post