ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 124


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்களுக்கு உதவும் நோக்கில் இங்கே ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்படுகின்றன. ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்த முடியும்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


These are public properties.
இவை பொது சொத்துக்கள்.

Are these public properties?
இவை பொது சொத்துக்களா?

These are not public properties.
இவை பொது சொத்துக்கள் அல்ல.

Aren't these public properties?
இவை பொது சொத்துக்கள் அல்லவா?

He is a lawyer.
அவர் ஒரு வழக்கறிஞர்.

Is he a lawyer?
அவர் ஒரு வழக்கறிஞரா?

He is not a lawyer.
அவர் ஒரு வழக்கறிஞர் அல்ல.

Isn't he a lawyer?
அவர் ஒரு வழக்கறிஞர் அல்லவா?

You can wake him up.
உங்களால் அவரை (தூக்கத்திலிருந்து) எழுப்ப முடியும்.

Can you wake him up?
உங்களால் அவரை எழுப்ப முடியுமா?

You can't wake him up.
உங்களால் அவரை எழுப்ப முடியுயாது.

Can't you wake him up?
உங்களால் அவரை எழுப்ப முடியுயாதா?


She has done something wrong.
அவள் ஏதோ தவறு செய்திருக்கிறாள்.

Has she done anything wrong?
அவள் ஏதாவது தவறு செய்திருக்கிறாளா?

She has not done anything wrong.
அவள் எந்த தவறும் செய்து இல்லை.

Hasn't she done anything wrong?
அவள் எந்த தவறும் செய்து இல்லையா?

They accused me.
அவர்கள் என் மீது குற்றம் சாட்டினார்கள்.

Did they accuse me?
அவர்கள் என் மீது குற்றம் சாட்டினார்களா?

They didn't accuse me.
அவர்கள் என் மீது குற்றம் சாட்டவில்லை.

Didn't they accuse me?
அவர்கள் என் மீது குற்றம் சாட்டவில்லையா?

We are waiting for you.
நாங்கள் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம்.

Are you waiting for me?
நீங்கள் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்களா?

We are not waiting for you.
நாங்கள் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பதில்லை.

Aren't you waiting for me?
நீங்கள் எனக்காக காத்துக்கொண்டிருப்பதில்லையா?
Previous Post Next Post