ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 125


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஆங்கிலத்தில் கதைக்க பயிச்சி செய்ய வேண்டும். நீங்கள் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி செய்யும் அளவுக்கு உங்களால் ஆங்கிலத்தில் கதைக்க முடிகிறது. 
 
ஆங்கிலத்தில் கதைக்கும் போது இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களையும், சொற்றொடர்களையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.

இவ்வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றினால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Rest of the world
உலகின் மீதமுள்ள பகுதிகள்

Rest of the country
நாட்டின் மீதமுள்ள பகுதிகள்

Rest of the house
வீட்டின் மீதமுள்ள பகுதிகள்

Rest of the people
மீதமுள்ள மக்கள்

Rest of the food
மீதமுள்ள உணவு

Rest of the workers
மீதமுள்ள தொழிலாளர்கள்

Two people were injured.
இருவர் காயமடைந்தார்கள்.

Were they injured?
அவர்கள் காயமடைந்தார்களா?

When were they injured?
அவர்கள் எப்போது காயமடைந்தார்கள்?

They were not injured.
அவர்கள் காயமடையவில்லை.

I saved his life.
நான் அவரது உயிரைக் காப்பாற்றினேன்.

Did you save his life?
நீங்கள் அவரது உயிரைக் காப்பாற்றினீர்களா?

You didn't save his life.
நீங்கள் அவரது உயிரைக் காப்பாற்றவில்லை.

Didn't you save his life?
நீங்கள் அவரது உயிரைக் காப்பாற்றவில்லையா?

Why didn't you save his life?
ஏன் நீங்கள் அவரது உயிரைக் காப்பாற்றவில்லை?


He is going to stay here.
அவர் இங்கே தங்கப் போகிறார்.

Is he going to stay here?
அவர் இங்கே தங்கப் போகிறாரா?

He is not going to stay here anymore.
அவர் இனிமேல் இங்கு தங்கப் போவதில்லை.

Isn't he going to stay here anymore?
அவர் இனிமேல் இங்கு தங்கப் போவதில்லையா?

This is really a bad situation.
இது உண்மையில் ஒரு மோசமான சூழ்நிலை.

Is this really a bad situation?
இது உண்மையில் ஒரு மோசமான சூழ்நிலையா?

This is not a bad situation.
இது ஒரு மோசமான சூழ்நிலையல்ல.

Isn't this a bad situation?
இது ஒரு மோசமான சூழ்நிலையல்லவா?

I will say it again.
நான் அதை மீண்டும் கூறுவேன்.

Will you say it again?
நீங்கள் அதை மீண்டும் கூறுவீர்களா?

I won't say it again.
நான் அதை மீண்டும் கூற மாட்டேன்.

Won't you say it again?
நீங்கள் அதை மீண்டும் கூற மாட்டீர்களா?
Previous Post Next Post