ஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 136 (Accept - ஏற்றுக்கொள்)


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே Accept (ஏற்றுக்கொள்) எனும் சொல்லை வைத்து கதைக்கப்படும் சில வாக்கியங்களும் அவற்றின் தமிழ் கருத்தும் தரப்பட்டுள்ளது.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Accept my gift.
எனது பரிசை ஏற்றுக்கொள்ளுங்கள்.

Accept my request.
எனது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்.

Accept my apologies.
எனது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.

Accept my regards.
எனது வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

Accept our condolences.
எங்கள் இரங்கலை ஏற்றுக்கொள்ளுங்கள்.

Accept that offer.
அந்த சலுகையை ஏற்றுக்கொள்ளுங்கள்.

You must accept that.
நீங்கள் அதைக் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Don't accept anything.
எதையும் ஏற்க வேண்டாம்.

Don't accept his gift.
அவரது பரிசை ஏற்க வேண்டாம்.

Don't accept anything less.
குறைவாக எதையும் ஏற்க வேண்டாம்.

Don't accept his apologies.
அவரது மன்னிப்பை ஏற்க வேண்டாம்.

Don't force anyone to accept anything.
எதையும் ஏற்றுக்கொள்ளுமாறு யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம்.


We have to accept the change.
நாம் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டி உள்ளது.

Do we have to accept the change?
நாம் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டி உள்ளதா?

We don't have to accept the change.
நாம் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டி இல்லை.

Don't we have to accept the change?
நாம் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டி இல்லையா?

I can accept her idea.
என்னால் அவளுடைய யோசனையை ஏற்றுக்கொள்ள முடியும்.

Can you accept her idea?
உங்களால் அவளுடைய யோசனையை ஏற்றுக்கொள்ள முடியுமா?

I can't accept her idea.
என்னால் அவளுடைய யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது.

Can't you accept her idea?
உங்களால் அவளுடைய யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாதா?

You should accept your mistake.
உங்கள் தவறை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Should you accept your mistake?
உங்கள் தவறை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?

You should not accept your mistake.
உங்கள் தவறை நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

Shouldn't you accept your mistake?
உங்கள் தவறை நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாதா?


We accept credit cards.
நாங்கள் கடன் அட்டைகளை ஏற்றுக்கொள்கிறோம்.

Do you accept credit cards?
நீங்கள் கடன் அட்டைகளை ஏற்றுக்கொள்கிறீர்களா?

We don't accept credit cards.
நாங்கள் கடன் அட்டைகளை ஏற்றுக்கொள்வதில்லை.

Don't you accept credit cards?
நீங்கள் கடன் அட்டைகளை ஏற்றுக்கொள்வதில்லையா?

It is hard to accept the truth.
உண்மையை ஏற்றுக்கொள்வது கடினம்.

Is it hard to accept the truth?
உண்மையை ஏற்றுக்கொள்வது கடினமா?

It is not hard to accept the truth.
உண்மையை ஏற்றுக்கொள்வது கடினம் அல்ல.

Isn't it hard to accept the truth?
உண்மையை ஏற்றுக்கொள்வது கடினம் அல்லவா?
Previous Post Next Post