ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 135


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தினமும் தொகுத்து வழங்கி வருகிறோம். இங்கே அவ்வாறான சில சொற்றொடர்களும், வாக்கியங்களும் தரப்பட்டுள்ளன.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலையை பொருத்து நீங்கள் பயன்படுத்த முடியும்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


They attended the function.
அவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

Did they attend the function?
அவர்கள் விழாவில் கலந்து கொண்டார்களா?

They didn't attend the function.
அவர்கள் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

Didn't they attend the function?
அவர்கள் விழாவில் கலந்து கொள்ளவில்லையா?

Agriculture is our main occupation.
விவசாயம் எங்கள் முக்கிய தொழில்.

Is Agriculture your main occupation?
விவசாயம் உங்கள் முக்கிய தொழிலா?

Agriculture is not our main occupation.
விவசாயம் எங்கள் முக்கிய தொழில் அல்ல.

Isn't Agriculture your main occupation?
விவசாயம் எங்கள் முக்கிய தொழில் அல்லவா?

You can blame him.
உங்களால் அவரைக் குறைகூற முடியும்.

Can you blame him?
உங்களால் அவரைக் குறைகூற முடியுமா?

You can't blame him.
உங்களால் அவரைக் குறைகூற முடியாது.

Can't you blame him?
உங்களால் அவரைக் குறைகூற முடியாதா?


He refused my idea.
அவர் என் யோசனையை மறுத்தார்.

Did he refuse my idea?
அவர் என் யோசனையை மறுத்தாரா?

He didn't refuse my idea.
அவர் என் யோசனையை மறுக்கவில்லை.

Didn't he refuse my idea? 
அவர் என் யோசனையை மறுக்கவில்லையா?

She revealed the truth.
அவள் உண்மையை வெளியிட்டாள்.

Did she reveal the truth?
அவள் உண்மையை வெளியிட்டாளா?

She didn't reveal the truth.
அவள் உண்மையை வெளியிடவில்லை.

Didn't she reveal the truth?
அவள் உண்மையை வெளியிடவில்லையா?
Previous Post Next Post