ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 128


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

பொதுவாக இங்கே பதிவிடப்படும் சிறிய வாக்கியங்களுடன், சற்று நீளமான வாக்கியங்களையும் பதிவிடத் துவங்கியுள்ளோம். அவற்றையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றி உங்களால் முயற்சித்துப் பார்க்க முடியும்.

இவ்வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றினால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Fortunately
அதிர்ஷ்டவசமாக

Unfortunately
துரதிர்ஷ்டவசமாக

At that time
அந்த நேரத்தில்

At this time
இந்த நேரத்தில்

At that second
அந்த நொடியில்

At that moment
அச்சமயம்

He can hear your voice.
அவனால் உங்கள் குரலைக் கேட்க முடியும்.

Can he hear my voice?
அவனால் என்னுடைய குரலைக் கேட்க முடியுமா?

He can't hear your voice.
அவனால் உங்கள் குரலைக் கேட்க முடியாது.

Can't he hear my voice?
அவனால் என்னுடைய குரலைக் கேட்க முடியாதா?

Why can't he hear my voice?
ஏன் அவனால் என்னுடைய குரலைக் கேட்க முடியாது?


I can tell you about the situation here.
இங்குள்ள நிலைமை பற்றி என்னால் உங்களுக்குக் கூற முடியும்.

Can you tell me about the situation there?
அங்குள்ள நிலைமை பற்றி உங்களால் எனக்குக் கூற முடியுமா?

I can't tell you about the situation here.
இங்குள்ள நிலைமை பற்றி என்னால் உங்களுக்குக் கூற முடியாது.

Can't you tell me about the situation there?
அங்குள்ள நிலைமை பற்றி உங்களால் எனக்குக் கூற முடியாதா?

Why can't you tell me about the situation there?
அங்குள்ள நிலைமை பற்றி ஏன் உங்களால் எனக்குக் கூற முடியாது?

We fight for our rights.
நங்கள் எங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறோம்.

Do you fight for your rights?
நீங்கள் உங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறீர்களா?

We don't fight for our rights.
நங்கள் எங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதில்லை.

Don't you fight for your rights?
நீங்கள் உங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதில்லையா?

They have to come up with a plan.
அவர்கள் ஒரு திட்டத்தை கொண்டு வர வேண்டி உள்ளது.

Do they have to come up with a plan?
அவர்கள் ஒரு திட்டத்தை கொண்டு வர வேண்டி உள்ளதா?

They don't have to come up with a plan.
அவர்கள் ஒரு திட்டத்தை கொண்டு வர வேண்டி இல்லை.

Don't they have to come up with a plan?
அவர்கள் ஒரு திட்டத்தை கொண்டு வர வேண்டி இல்லையா?
Previous Post Next Post