ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 131


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே தரப்பட்டுள்ள சில ஆங்கில வாக்கியங்களின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும் அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


They like to do that.
அவர்கள் அதை செய்ய விரும்புகிறார்கள்.

Do they like to do that?
அவர்கள் அதை செய்ய விரும்புகிறார்களா?

They don't like to do that.
அவர்கள் அதை செய்ய விரும்புவதில்லை.

Don't they like to do that?
அவர்கள் அதை செய்ய விரும்புவதில்லையா?

We tried to go there.
நாங்கள் அங்கு செல்ல முயற்சித்தோம்.

Did we try to go there?
நாங்கள் அங்கு செல்ல முயற்சித்தோமா?

We didn't try to go there.
நாங்கள் அங்கு செல்ல முயற்சிக்கவில்லை.

Didn't we try to go there?
நாங்கள் அங்கு செல்ல முயற்சிக்கவில்லையா?

I am nervous.
நான் பதட்டமாக இருக்கிறேன்.

Are you nervous?
நீங்கள் பதட்டமாக இருக்கிறீர்களா?

Why are you so nervous?
நீங்கள் ஏன் மிகவும் பதட்டமாக இருக்கிறீர்கள்?

I am not nervous.
நான் பதட்டமாக இல்லை.

Aren't you nervous?
நீங்கள் பதட்டமாக இல்லையா?


What did he teach you?
அவர் உங்களுக்கு என்ன கற்பித்தார்?

He taught us a lesson.
அவர் எங்களுக்கு ஒரு பாடம் கற்பித்தார்.

Did he teach you any lesson?
அவர் உங்களுக்கு ஏதாவது பாடம் கற்பித்தாரா?

He didn't teach us any lesson.
அவர் எங்களுக்கு எந்தப் பாடமும் கற்பிக்கவில்லை.

Didn't he teach you any lesson?
அவர் உங்களுக்கு எந்தப் பாடமும் கற்பிக்கவில்லையா?

They will create a problem.
அவர்கள் ஒரு பிரச்சினையை உருவாக்குவார்கள்.

Will they create a problem?
அவர்கள் ஒரு பிரச்சினையை உருவாக்குவார்களா?

They won't create any problem.
அவர்கள் எந்த பிரச்சனையையும்  உருவாக்க மாட்டார்கள்.

Won't they create any problem?
அவர்கள் எந்த பிரச்சனையையும்  உருவாக்க மாட்டார்களா?

You should wear shoes.
நீங்கள் காலணிகளை அணிய வேண்டும்.

Should we wear shoes?
நாங்கள் காலணிகளை அணிய வேண்டுமா?

You shouldn't wear shoes.
நீங்கள் காலணிகளை அணியக்கூடாது.

Shouldn't you wear shoes?
நீங்கள் காலணிகளை அணியக்கூடாதா?
Previous Post Next Post