ஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 139 (Send - அனுப்பு)


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே Send (அனுப்பு) எனும் சொல்லை வைத்து கதைக்கப்படும் சில வாக்கியங்களும் அவற்றின் தமிழ் கருத்தும் தரப்பட்டுள்ளது.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

Send எனும் சொல் ஆங்கிலத்தில் அனுப்பு என்பதைக் குறிக்கும்.


Send it here.
அதை இங்கே அனுப்புங்கள்.

Send it there.
அதை அங்கே அனுப்புங்கள்.

Send him out.
அவரை வெளியே அனுப்புங்கள்.

Send them home.
அவர்களை வீட்டிற்கு அனுப்புங்கள்.

Don't send it here.
அதை இங்கே அனுப்ப வேண்டாம்.

Don't send him out.
அவரை வெளியே அனுப்ப வேண்டாம்.

Don't send them home.
அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டாம்.

Who sent you?
உங்களை அனுப்பியது யார்?

They sent us here.
.அவர்கள் எங்களை இங்கு அனுப்பினார்கள்.

Did they send you here?
அவர்கள் உங்களை இங்கு அனுப்பினார்களா?

Why did they send you here?
அவர்கள் ஏன் உங்களை இங்கு அனுப்பினார்கள்?

They didn't send us here.
அவர்கள் எங்களை இங்கு அனுப்பவில்லை.

Didn't they send you here?
அவர்கள் உங்களை இங்கு அனுப்பவில்லையா?

I will send it to you.
நான் அதை உங்களுக்கு அனுப்புவேன்.

Will you send it to me?
நீங்கள் அதை எனக்கு அனுப்புவீர்களா?

When will you send it to me?
நீங்கள் அதை எப்போது எனக்கு அனுப்புவீர்கள்?

I won't send it to you.
நான் அதை உங்களுக்கு அனுப்ப மாட்டேன்.

Won't you send it to me?
நீங்கள் அதை எனக்கு அனுப்ப மாட்டீர்களா?


The books were sent to the library.
புத்தகங்கள் நூலகத்திற்கு அனுப்பப்பட்டன.

Were the books sent to the library?
புத்தகங்கள் நூலகத்திற்கு அனுப்பப்பட்டனவா?

When were the books sent to the library?
புத்தகங்கள் எப்போது நூலகத்திற்கு அனுப்பப்பட்டன?

The books were not sent to the library.
புத்தகங்கள் நூலகத்திற்கு அனுப்பப்படவில்லை.

Who sent the books to the library?
புத்தகங்களை நூலகத்திற்கு அனுப்பியது யார்?
 
We sent you a letter.
நாங்கள் உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினோம்.

Did you send me a letter?
நீங்கள் எனக்கு ஒரு கடிதம் அனுப்பினீர்களா?

We didn't send you a letter.
நாங்கள் உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பவில்லை.

Didn't you send me a letter?
நீங்கள் எனக்கு ஒரு கடிதம் அனுப்பவில்லையா?

You can send them now.
இப்போது உங்களால் அவற்றை அனுப்ப முடியும்.

Can you send them now?
இப்போது உங்களால் அவற்றை அனுப்ப முடியுமா?

You can't send them now.
இப்போது உங்களால் அவற்றை அனுப்ப முடியாது.

Can't you send them now?
இப்போது உங்களால் அவற்றை அனுப்ப முடியாதா?
Previous Post Next Post