ஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 141 (Do - செய், செய்யுங்கள்)


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே Do (செய், செய்யுங்கள்) எனும் ஆங்கில சொல்லை வைத்து கதைக்கப்படும் சில வாக்கியங்களும் அவற்றின் தமிழ் கருத்தும் தரப்பட்டுள்ளன.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

Do எனும் ஆங்கிலச் சொல் தமிழில் செய் அல்லது செய்யுங்கள் என்று அர்த்தம் தரும்.

நிகழ்காலம் - பன்மை Do, ஒருமை Does
இறந்தகாலம் - Did
எதிர்காலம் - Will do


Do it.
அதை செய்யுங்கள்.

Don't do it.
அதை செய்ய வேண்டாம்.

Do it now.
அதை இப்போதே செய்யுங்கள்.

Don't do it now.
அதை இப்போது செய்ய வேண்டாம்.

I can do that.
என்னால் அதை செய்ய முடியும்.

Can you do that?
உங்களால் அதை செய்ய முடியுமா?

I can't do that.
என்னால் அதை செய்ய முடியாது.

Can't you do that?
உங்களால் அதை செய்ய முடியாதா?

You should do that.
நீங்கள் அதை செய்ய வேண்டும்.

Should I do that?
நான் அதை செய்ய வேண்டுமா?

You shouldn't do that.
நீங்கள் அதை செய்யக்கூடாது.

Shouldn't you do that?
நீங்கள் அதை செய்யக்கூடாதா?


She will do that.
அவள் அதை செய்வாள்.

Will she do that?
அவள் அதை செய்வாளா?

She won't do that?
அவள் அதை செய்ய மாட்டாள்?

Won't she do that?
அவள் அதை செய்ய மாட்டாளா?


Who did it?
அதை செய்தது யார்?

He did it.
அவன் அதை செய்தான். 

Did he do it?
அவன் அதை செய்தானா?

He didn't do it.
அவன் அதை செய்யவில்லை.

Didn't he do it?
அவன் அதை செய்யவில்லையா?

We did your work.
நாங்கள் உங்கள் வேலையைச் செய்தோம்.

Did you do my work?
நீங்கள் என் வேலையைச் செய்தீர்களா?

We didn't do your work.
நாங்கள் உங்கள் வேலையைச் செய்யவில்லை.

Didn't you do my work?
நீங்கள் என் வேலையைச் செய்யவில்லையா?

You must do that.
நீங்கள் அதை கட்டாயம் செய்ய வேண்டும்.

You can do that.
உங்களால் அதை செய்ய முடியும்.

You can't do that.
உங்களால் அதை செய்ய முடியாது.

We can do that.
எங்களால் அதை செய்ய முடியும்.

தொழில் செய்பவர்கள், வெளிநாடுகளில் வசிப்பவர்கள் உற்பட பலருக்கும் இவ்வாறான பதிவுகள் கட்டாயம் உதவிபுரியும் என்பதால் இதனை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Previous Post Next Post