ஆங்கிலம் கற்போம் - உலக பிரபலங்களின் உரைகளில் இருந்து | Learn English with Amitabh Bachchan


ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதியின் ஓர் புதிய அத்தியாயமாக உலக பிரபலங்களின் ஆங்கில உரைகளில் இருந்து பெறப்பட்ட வாக்கியங்கள் மற்றும் அவற்றின் தமிழ் கருத்து இங்கே தரப்படுகிறது.

நீங்கள் ஆங்கிலத்தில் கதைக்க வேண்டுமென்றால் ஆங்கிலத்தில் கதைப்பவர்களுக்கு செவிமடுக்க வேண்டும். அவர்கள் பேசும் வசனங்களை புரிந்துகொள்ள வேண்டும், மற்றும் நீங்கள் பேசும் போதும் அந்த வாக்கியங்களை பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கட்டாயம் உங்களாலும் ஆங்கிலத்தில் பேச முடியும். 

மேலும் ஒரு ஆங்கில உரையை செவிமடுத்து உங்களால் முடிந்த வரையில் அந்த உரையில் உள்ள புதிய சொற்களை குறித்துக்கொள்ளுங்கள். பின்னர் அகராதியின் உதவியோடு அவற்றின் தமிழ் கருத்துக்களை தேடிக் கற்றுக்கொள்ளுங்கள். இது உங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளவும், நீங்கள் அறிந்துவைத்திருக்கும் ஆங்கில சொற்களின் அளவையும் அதிகரிக்கவும் பயனுள்ளதாய் அமையும்.

இங்கே நடிகர் அமிதாப் பச்சனின் ஆங்கில உரையில் இருந்து பெறப்பட்ட வாக்கியங்கள் மற்றும் அவற்றின் தமிழ் கருத்துக்கள் தரப்பட்டுள்ளன. அவரின் முழு உரையின் காணொளியையும் ஆங்கில உப தலைப்புக்களுடன் கீழேபார்வையிட முடியும்.


A good education is the most valuable thing.
ஒரு நல்ல கல்வியே மிகவும் பெறுமதிமிக்க விடயம்.

It is our greatest wealth.
அது எங்கள் மிகப்பெரிய செல்வம்.

Fortunes will come and go, money will come and go.
அதிர்ஷ்டம் வந்து போகும், பணம் வந்து போகும்.

A good education can never be taken away.
ஒரு நல்ல கல்வியை ஒருபோதும் பறிக்க முடியாது.

The child is the dream of its parent.
குழந்தை அதன் பெற்றோரின் கனவு.

That is the easy part.
அது எளிதான பகுதி.

The tough one comes later.
கடினமான ஒன்று பின்னர் வருகிறது.

Your parents look upon you with prayers.
உங்கள் பெற்றோர் உங்களை பிரார்த்தனைகளுடன் பார்க்கிறார்கள்.

Your teachers look up to you with pride.
உங்கள் ஆசிரியர்கள் உங்களை பெருமையுடன் பார்க்கிறார்கள்.

That is the strength, the power of a dream.
அதுவே ஒரு கனவின் வலிமை, சக்தி.

Today it is yours.
இன்று அது உங்களுடையது.

No one said that life is easy.
வாழ்க்கை எளிதானது என்று யாரும் சொல்லவில்லை.

A dream has hands, it has feet, it has a body.
ஒரு கனவுக்கு கைகள் உள்ளன, அதற்கு கால்கள் உள்ளன, அதற்கு ஒரு உடல் உள்ளது.

The dream is you and you are the dream.
கனவு நீங்கள் தான், நீங்கள் தான் கனவு.

It is not about winning or losing, it is about living a life.
அது வெற்றியடைவதோ அல்லது தோல்வியடைவதோ பற்றியது அல்ல, அது ஒரு வாழ்க்கையை வாழ்வது பற்றியது.

I was their dream.
நான் அவர்களின் கனவாக இருந்தேன்.

Be the dream that you wish to see in the world.
நீங்கள் உலகில் பார்க்க விரும்பும் கனவாக இருங்கள்.

Your dreams are precious. Do not trade them for anything in the world.
உங்கள் கனவுகள் விலைமதிப்பற்றவை. உலகிலுள்ள எதற்காகவும் அவற்றை விற்றுவிட வேண்டாம்.

Life is an order, a discipline.
வாழ்க்கை ஒரு ஒழுங்கு, ஒரு ஒழுக்கம்.

Life is a focus.
வாழ்க்கை ஒரு கவனம்.

Life is a purpose.
வாழ்க்கை ஒரு நோக்கம்.

Do not gamble on life.
வாழ்க்கை மீது சூதாட வேண்டாம்.

It may not happen twice.
அது இரண்டு முறை ஏற்படாது.

Education is a fundamental human right.
கல்வி என்பது ஒரு அடிப்படை மனித உரிமை.

Dare to dream, learn to excel.
கனவு காண தைரியமாக இருங்கள், சிறந்து விளங்க கற்றுக்கொள்ளுங்கள்.
أحدث أقدم