ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 143


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே தரப்படும் வாக்கியங்கள் நேர்மறை, கேள்வி, எதிர்மறை மற்றும் எதிர்மறை கேள்வி வாக்கியங்கள் என நீங்கள் அவற்றை உங்களுக்கு விரும்பிய வடிவில் பேசக்கூடியவாறு தரப்படுகின்றன.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Street dogs
தெரு நாய்கள்

Wild elephants
காட்டு யானைகள்

Pet animals
செல்லப்பிராணிகள்

Wild animals
காட்டு விலங்குகள்

Farm animals
பண்ணை விலங்குகள்

Animal food
விலங்கு உணவு
 
As I told you.
நான் உங்களிடம் சொன்னது போல.

Not bad
மோசம் இல்லை

Leave it
அதை விட்டுவிடுங்கள்

Very old
மிகவும் பழைய

What next
அடுத்து என்ன

I am still standing here.
நான் இன்னும் இங்கே நின்றுகொண்டு இருக்கிறேன்.

Are you still standing there?
நீங்கள் இன்னும் அங்கே நின்றுகொண்டு இருக்கிறீர்களா?

You are not standing there.
நீங்கள் அங்கே நின்றுகொண்டு இருப்பதில்லை.

Aren't you standing there?
நீங்கள் அங்கே நின்றுகொண்டு இருப்பதில்லையா?



It was difficult to do that.
அதைச் செய்வது கடினமாக இருந்தது.

Was it difficult to do that?
அதைச் செய்வது கடினமாக இருந்ததா?

It was not difficult to do that.
அதைச் செய்வது கடினமாக இருக்கவில்லை.

Wasn't it difficult to do that?
அதைச் செய்வது கடினமாக இருக்கவில்லையா?

This is what I really like to do.
நான் செய்ய விரும்புவது இது தான்.

Is this what you like to do?
நீங்கள் செய்ய விரும்புவது இது தானா?

This is not what I like to do.
நான் செய்ய விரும்புவது இதுவல்ல.

Isn't this what you like to do?
நீங்கள் செய்ய விரும்புவது இதுவல்லவா?

I was the one who did this.
நான் தான் இதைச் செய்தேன்.

Are you the one who did this?
இதைச் செய்தது நீங்கள் தானா? 

You are not the one who did this.
இதைச் செய்தது நீங்கள் அல்ல.

Aren't you the one who did this?
இதைச் செய்தது நீங்கள் அல்லவா?
أحدث أقدم