ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 154


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


He can bring it.
அவனால் அதை கொண்டு வர முடியும்.

Can he bring it?
அவனால் அதை கொண்டு வர முடியுமா?

He can't bring it.
அவனால் அதை கொண்டு வர முடியாது.

Can't he bring it?
அவனால் அதை கொண்டு வர முடியாதா?

We will keep that.
நாங்கள் அதை வைத்திருப்போம்.

Will we keep that?
நாங்கள் அதை வைத்திருப்போமா?

We won't keep that.
நாங்கள் அதை வைத்திருக்க மாட்டோம்.

Won't we keep that?
நாங்கள் அதை வைத்திருக்க மாட்டோமா?

Do your best.
உங்களால் முடிந்ததை (நன்றாக) செய்யுங்கள்.

I did my best.
நான் என்னால் முடிந்ததை செய்தேன்.

Did I do my best?
நான் என்னால் முடிந்ததை செய்தேனா?

I didn't do my best.
நான் என்னால் முடிந்ததை செய்யவில்லை.

Didn't you do your best?
நீங்கள் உங்களால் முடிந்ததை செய்யவில்லையா?

Why didn't you do your best?
ஏன் நீங்கள் உங்களால் முடிந்ததை செய்யவில்லை?


I introduced him.
நான் அவனை அறிமுகப்படுத்தினேன்.

Did you introduce him?
நீங்கள் அவனை அறிமுகப்படுத்தினீர்களா?

I didn't introduce him.
நான் அவனை அறிமுகப்படுத்தவில்லை.

Didn't you introduce him?
நீங்கள் அவனை அறிமுகப்படுத்தவில்லையா?

She can tell the story.
அவளால் கதையை சொல்ல முடியும்.

Can she tell the story?
அவளால் கதையை சொல்ல முடியுமா?

She can't tell the story.
அவளால் கதையை சொல்ல முடியாது.

Can't she tell the story?
அவளால் கதையை சொல்ல முடியாதா?
أحدث أقدم