ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 163


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம் (spoken English sentences everyday). 

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Do as I say.
நான் சொன்னபடி செய்யுங்கள்.

Don't do what he says.
அவன் சொல்வதை செய்யாதீர்கள்.

I hope so.
நான் அப்படி நம்புகிறேன்.

I think so.
நான் அப்படி நினைக்கிறேன்.

I don't think so.
நான் அப்படி நினைப்பதில்லை.

Don't worry.
கவலைப்பட வேண்டாம்.

Can I help you?
நான் உங்களுக்கு உதவ முடியுமா?

You can't help me.
நீங்கள் எனக்கு உதவ முடியாது.

Don't waste my time.
என் நேரத்தை வீணாக்க வேண்டாம்.

You are wasting my time.
நீங்கள் எனது நேரத்தை வீணடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.


Do you understand?
உங்களுக்குப் புரிகிறதா?

I don't understand.
எனக்குப் புரிவதில்லை.

What do you say?
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

What do you want?
உங்களுக்கு என்ன வேண்டும்?

I don't want it.
எனக்கு அது வேண்டாம்.

Where are you going?
நீங்கள் எங்கே போய்க்கொண்டு இருக்கிறீர்கள்.

Forget it.
அதை மறந்துவிடுங்கள்.

Forgive me.
என்னை மன்னித்துவிடுங்கள்.

I don't have time.
எனக்கு நேரமில்லை.

أحدث أقدم