ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 164


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம் (spoken English sentences everyday with Tamil meaning). 

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Powerful people come from powerful places.
பலம்வாய்ந்த மக்கள் பலம்வாய்ந்த இடங்களிலிருந்து வருகிறார்கள்.

The breath of a wounded lion is worse than a roar.
காயப்பட்ட சிங்கத்துடைய மூச்சு, கர்ஜனையை விட பயங்கரமாக இருக்கும்.

What is the depth of this ocean?
இந்தக் கடலின் ஆழம் என்ன?

Cannot rule without knowing the depth.
ஆழம் தெரியாமல் ஆள முடியாது.

Let's go down and measure.
இறங்கி அளந்து பார்த்துவிடலாம்.

The one who looks around the town will know about the town.
ஊர் சுற்றிப் பார்ப்பவன் ஊரைப் பற்றித் தெரிந்துகொள்வான்.

This town will know about the one who came to rule the town.
ஊரையே ஆள வந்தவனை பற்றி இந்த ஊரே தெரிந்துகொள்ளும்.


I came to Bombay at a young age.
சின்ன வயதிலே பம்பாய்க்கு வந்தேன்.

It was like falling into a fire.
நெருப்பில் விழுந்தது போல் இருந்தது.

But Bombay did not know that it was the iron that fell into the fire.
ஆனால், பம்பாய்க்குத் தெரியவில்லை, நெருப்பில் விழுந்தது இரும்பு என்று.

All that the knife knew was one thing.
கத்திக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்று தான்.

There should be a little bit of fear in life.
கொஞ்சமாவது வாழ்க்கையில் பயம் இருக்க வேண்டும்.

There should be fear in life.
வாழ்க்கையில் பயம் இருக்க வேண்டும்.

It should be only in the heart.
அது இதயத்துக்குள் மட்டும் தான் இருக்க வேண்டும்.
أحدث أقدم