ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 165


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம் (spoken English sentences everyday with Tamil meaning). 

இங்கே பணத்துடன் (Money) தொடர்புடைய 40 இற்கும் மேற்பட்ட ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


It's my money. 
அது என் பணம்.

I have no money.
என்னிடம் பணம் ஏதுவும் இல்லை.

Who has money?
யாரிடம் பணம் உள்ளது?

We want more money.
எங்களுக்கு இன்னும் அதிக பணம் வேண்டும்.

I need some money.
எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது.

Do you need money? 
உங்களுக்குப் பணம் தேவைப்படுகிறதா?

They need money.
அவர்களுக்குப் பணம் தேவைப்படுகிறது.

She needs his money.
அவளுக்கு அவனுடைய பணம் தேவைப்படுகிறது.

I want money.
எனக்கு பணம் வேண்டும்.

I want more money.
எனக்கு இன்னும் அதிக பணம் வேண்டும்.

They need some money.
அவர்களுக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது.

Where is my money?
என் பணம் எங்கே?


Bring my money. 
என் பணத்தை கொண்டு வாருங்கள்.

Bring your money. 
உங்கள் பணத்தை கொண்டு வாருங்கள்.

He returned the money.
அவன் பணத்தை திருப்பிக் கொடுத்தான்.

Time is money.
நேரம் என்பது பணம்.

Give us a little money.
எங்களுக்கு கொஞ்சம் பணம் கொடுங்கள்.

Keep this money.
இந்தப் பணத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

Don't keep his money.
அவனுடைய பணத்தை வைத்துக்கொள்ள வேண்டாம்.

Take this money.
இந்தப் பணத்தை எடுங்கள்.

Don't take his money.
அவனுடைய பணத்தை எடுக்க வேண்டாம்.

Put your money.
உங்கள் பணத்தை போடுங்கள்.

She gave me some money.
அவள் எனக்கு கொஞ்சம் பணம் கொடுத்தாள்.

I want my money.
எனக்கு என் பணம் வேண்டும்.


He wants my money.
அவனுக்கு என் பணம் வேண்டும்.

Do you want money?
உங்களுக்குப் பணம் வேண்டுமா?

Why do you want money?
ஏன் உங்களுக்குப் பணம் வேண்டும்?

Does he want money?
அவனுக்குப் பணம் வேண்டுமா?

He doesn't need money.
அவனுக்குப் பணம் தேவையில்லை.

Who stole her money?
அவளுடைய பணத்தை திருடியது யார்?

Someone stole her money.
அவளுடைய பணத்தை யாரோ திருடினார்கள்.

It is your money.
அது உங்கள் பணம்.

Is it your money?
அது உங்கள் பணமா?

It is not my money.
அது என் பணமல்ல.

It is his money.
அது அவனுடைய பணம்.


Is it his money?
அது அவனுடைய பணமா?

It is not his money.
அது அவருடைய பணமல்ல.

I need this money.
எனக்கு இந்தப் பணம் தேவைப்படுகிறது.

We used that money.
அந்த பணத்தை நாங்கள் பயன்படுத்தினோம்.

We couldn't use that money.
அந்த பணத்தை எங்களால் பயன்படுத்த முடியவில்லை.

You can't use that money.
அந்த பணத்தை உங்களால் பயன்படுத்த முடியாது.

You shouldn't use that money.
அந்தப் பணத்தை நீங்கள் பயன்படுத்தக் கூடாது.

It is just money.
அது வெறும் பணம் தான்.

It is not just money.
அது வெறும் பணம் மட்டுமல்ல.
Previous Post Next Post