ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 173


ஆங்கிலத்தில் ஒருவருக்கு வழிகாட்டும் முறைகள் (Giving Directions in English) 

ஆங்கிலத்தில் உங்கள் கருத்தைத் தெரிவிக்க உதவும் சில ஆங்கில வாக்கியங்களையும் அவற்றின் தமிழ் கருத்தையும் இங்கே பார்க்கலாம்.

இதனை PDF வடிவிலும் உங்களால் தரவிறக்கிக்கொள்ள முடியும்.


Take this road.
இந்த சாலையில் செல்லுங்கள்.

Turn left there.
அங்கே இடதுபுறம் திரும்பவும்.

Go straight.
நேராக செல்லுங்கள்.

Go along this way.
இந்த வழியாக செல்லுங்கள்.

It's on your right.
அது உங்கள் வலதுபுறத்தில் உள்ளது.

It's on your left.
அது உங்கள் இடதுபுறத்தில் உள்ளது.

Go this way.
இந்த வழியில் செல்லுங்கள்.

Go up.
மேலே செல்லுங்கள்.

It's next to that building.
அது அந்தக் கட்டிடத்துக்குப் பக்கத்தில்தான் இருக்கிறது.

Turn right.
வலதுபுறம் திரும்பவும்.

Turn left.
இடதுபுறம் திரும்பவும்.

Take the first road on the left.
இடதுபுறத்தில் உள்ள முதலாவது சாலையில் செல்லுங்கள்.

Take the second road on the right.
வலதுபுறத்தில் உள்ள இரண்டாவது சாலையில் செல்லுங்கள்.

It's on the corner.
அது மூலையில் இருக்கிறது.

It's about 500 meters from here.
அது இங்கிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது.

Take the second left.
இரண்டாவதாக வரும் இடதுபுறப் பாதையில் செல்லுங்கள்.

Turn back.
பின்னோக்கித் திரும்புங்கள் 
(பின்னோக்கித் திரும்பி வாருங்கள்).

You’re going the wrong way.
நீங்கள் தவறான வழியில் போய்க்கொண்டிருக்கிறீர்கள்.

இது போன்று ஆங்கிலம் கற்க மற்றும் ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்களுக்கு உதவும் நோக்கில் பல பதிவுகள் எமது இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றையும் கற்று உங்கள் ஆங்கில அறிவை விருத்தி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Previous Post Next Post