US Lottery வீசாவுக்கு இன்னும் 12 நாட்கள் மாத்திரமே மீதமாக உள்ளன!


ஐக்கிய அமெரிக்காவின் Electronic Diversity Visa Program இற்கு இன்னும் 12 நாட்கள் மாத்திரமே மீதமாக உள்ளன.

US Lottery Visa வுக்கான விண்ணப்பத் திகதி எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னர் விண்ணப்பியுங்கள்.

https://dvprogram.state.gov எனும் இந்த இணையதள முகவரி ஊடாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த இணையதள முகவரி தவிர்ந்த மற்றைய அனைத்தும் போலியானவை.

விண்ணப்பிப்பதற்கு எந்தவிதக் கட்டணங்களும் அறவிடப்படுவதில்லை.
(அவ்வாறு கட்டணம் அறவிடுவதாக யாரேனும் சொன்னால் அதுவும் போலியானது).

விண்ணப்பிப்பது ஒன்றும் சிரமமான விடயம் கிடையாது. விண்ணப்பிக்க கடவுச்சீட்டு கூடத் தேவைப்படுவதில்லை. இலகுவாக விண்ணப்பிக்கலாம். நீங்கள் தேர்தெடுக்கப்பட்டால் மாத்திரமே மேலதிக ஆவணங்கள் தேவைப்படும்.

விண்ணப்பிப்பதற்கு ஒருவருக்கு ஒரு வாய்ப்பு மாத்திரமேவழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் முழுவதுமாக நிராகரிக்கப்படும்.

திருமணம் முடித்தவர்கள் மட்டும் உங்கள் துணை மற்றும் குழந்தைகளின் விபரங்களை வழங்க சந்தர்ப்பம் வழங்கப்படும். குழந்தைகள் 21 வயதுக்கு உற்பட்ட திருமணமாகாதவர்களாக இருத்தல் வேண்டும். குழந்தைகள் எனும் பட்சத்தில் உங்கள் குழந்தைகள், வளர்ப்புக் குழந்தைகள், முன்னைய துணையின் குழந்தைகள் என அனைவரும் உள்ளடங்குவார்கள்.

21 வயதுக்கு மேற்பட்ட மற்றும் திருமணமான குழந்தைகள் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். அவர்களை உங்கள் குழந்தைகள் பட்டியலில் சேர்த்த்து விண்ணப்பிக்க வேண்டாம்.

மேலும், விண்ணப்பத்தில் திகதிகளைக் குறிப்பிடும் போது மாதம்/நாள்/வருடம் எனும் ஒழுங்கில் திகதி அமைய வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி, எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் போன்ற தகவல்களை YouTube போன்ற சமூக வலைதளங்களில் இலகுவாக தமிழுலும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், மேலே குறிப்பிடப்பட்ட இணையதள முகவரி தவிர்ந்த வேறு எங்கேயும் அல்லது எந்தவித கட்டணமும் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டாம்.

Electronic Diversity Visa Program மூலம் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு வதிவிட உரிமையும் (Permanent Resident), 5 வருடங்களில் அமெரிக்க குடியுரிமையும் (US Citizenship) வழங்கப்படும்.
أحدث أقدم