பசுபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி : சுனாமி எச்சரிக்கை..!

Related image

பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த  பூமியதிர்ச்சியினை அடுத்து குறித்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பசுபிக் பெருங்கடலில் 7.7 ரிச்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் பெரிங் தீவிலிருந்து சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் 11.7.கிலோமீற்றர் ஆழத்தில் சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சியொன்று ஏற்பட்டுள்ளது.மேலும் அங்கு சுனாமி வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக ரஷ்யாவின் அவசரகால அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: virakesari.lk


Previous Post Next Post