2017 அரச புகைப்பட விழா இன்று ஆரம்பம்..!

Related image

அரச புகைப்பட விழா 2017 இன்று (19) மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தாமரைத்தடாகம் அரங்கில் நடைபெறவுள்ளது.

உள்விவகார, வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார விவகார அமைச்சு மற்றும் கலாசார திணைக்களம், கலாசார விவகார திணைக்களம் ஆகியன ,இணைந்து இரண்டாவது முறையாக இந்த புகைப்பட விழாவை ஏற்பாடு செய்துள்ளன.

வாழ்க்கை முறை மற்றும் கலாசார அங்கங்கள், இயற்கை, வனஜீவராசிகள் மற்றும் பூமியின் காட்சிகள், ஊடகம், செய்தி மற்றும் விளையாட்டு, சுப நிகழ்வுகள் ஆகிய தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படவுள்ளதுடன் தெரிவு செய்யப்பட்ட புகைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளதுடன் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 634 போட்டியாளர்களின் 4211 படைப்புகள் அரச புகைப்பட விழாவிற்கு கிடைத்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரச புகைப்பட விழாவின் விருது வழங்கும் நிகழ்வை முன்னிட்டு அனுப்பப்பட்டுள்ள படைபுகளில் தெரிவு செய்யப்பட்ட 150 புகைப்படங்களைக் கொண்டு கண்காட்சியொன்று எதிர்வரும் 20, 21ம் திகதிகளில் காலை 8.00 மணி தொடக்கம் 5.00 மணிவரை கொழும்பு தாமரைத் தடாகம் அரங்கில் நடத்தப்படவுள்ளது.

2017ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு பிரபல புகைப்படக்கலைஞர் டொக்டர் டி.எஸ்.யு.டி சில்வாவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
Previous Post Next Post