தமிழ் / சிங்கள / முஸ்லீம் பாடசாலைகளின் விடுமுறை விபரம்..!

Related image

நாட்டிலுள்ள தமிழ் சிங்கள அரச பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை நான்காம்  திகதி முதல் மூடப்படுகின்றன என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

மூன்றாம் தவணைக்காக மேற்படி பாடசாலைகள் எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இதேவேளை நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் யாவும், நோன்புப்பெருநாள் விடுமுறைக்காக சுமார் 1 மாதம் மூடபட்டிருந்தன. அதனால்  முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை இம்மாதம்  18.08.2017  இல் வழங்கப்பட்டு, மீண்டும் மூன்றாம் தவணைக்காக 28.08.2017 இல் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை உயர்தர பரீட்சை நடைபெறும் பாடசாலைகள் ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 6 வரை மூடப்படும்.
Previous Post Next Post