இணையதளம் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிப்பது? | How to earn online?


இணையதளம் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிப்பது?

இன்றைய உலகில் பல துறைகளிலும் இணையம் (Internet) என்பது ஓர் முக்கியமான அம்சமாக மாற்றிவிட்ட நிலையில் இணையத்தை பலரும் பல தேவைகளுக்காக உபயோகிக்கின்றனர். தற்போதை காலகட்டத்தில் சமூகவலைத்தளங்களின் (Social Media) அளப்பரிய வளர்ச்சியினால் இணையம் என்பது ஓர் பொழுதுபோக்கு அம்சமாகவே மாறிவிட்டது எனக் கூறலாம்.

இணையவழி தொழில் வாய்ப்புக்கள் (Online Jobs)
இணையப் பயன்பாட்டில் பொழுதுபோக்குடன் சேர்த்து பலர் வீட்டில் இருந்தவாறே இணையத்தின் மூலம் பணம் சம்பாதிக்கின்றனர். இது உண்மையில் சாத்தியமா ? ஆம், மாணவர் உலகம் இணையதளத்தின் அட்மின் ஆகிய நானும் பல்வேறு வகையில் இணையத்தின் மூலம் மாதாந்தம் குறிப்பிடத்தக்களவு ஓர் வருமானத்தை பெறுகிறேன்.

இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தமட்டி,ல் சாதாரண கணனி அறிவு மற்றும் ஆங்கில அறிவைக் கொண்டு குறிப்பிடத்தக்க அளவில் (பகுதி நேர / முழு நேர) இணையத்தில் பணம் சம்பாதிக்கக் கூடிய பல வழிமுறைகள் உள்ளன. இவ்வாறு பணம் சம்பாதிப்பதற்கு நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் ஜீனியஸ் ஆக இருக்க வேண்டிய தேவையில்லை. சிலவேளைகளில் இதற்கு ஒரு சாதாரண ஸ்மார்ட் போன் (Smart Phone) இனை இயக்கும் அறிவு மட்டுமே போதுமானதாக அமையும்.

எனினும், கணினி சம்பத்தப்பட்ட எதாவது துறையில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் அத்துறையில் (பகுதி நேர / முழு நேர) இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் உங்களுக்கும் அதிகமாகவே உள்ளன. போலி இணையதளங்கள் (Scam Sites)
இணையத்தில் பணம் சம்பாதிக்க முற்படும் அனைவரும் முதலில் முகம்கொடுக்கும் மிகப்பெரும் பிரச்சினைதான் Scam Sites எனப்படும் போலி இணையதளங்களாகும். இப்போலி இணையதளங்கள் இணையவழி வேலைவாய்ப்புக்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி உங்களிடமிருந்து பணம் அறவிடலாம், அல்லது உங்கள் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, passwords போன்ற தகவல்களை சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம்.

முதல் தடவை இணையத்தில் பணம் சம்பாதிக்க முற்படும் ஒருவர் அல்லது அது பற்றி தகவல்களைத் திரட்ட முற்படும் ஒருவர் இவ்வாறான இணையதளங்களை தவிர்த்து,  உண்மையாகவே இணையவழி வேலைவாய்ப்புக்களை பெறுவது மிகவும் பெரிய ஒரு சவாலாக அமைந்துவிடும்.

போலி இணையதளங்களை எவ்வாறு தவிர்ப்பது?

ஒரு மணித்தியாலத்தில் 100 டாலர்கள் அல்லது ஒரு நாளில் 1000 டாலர்கள் இணையத்தில் உடனடியாக சம்பாதிக்கலாம் என்று யாராவது கூறினால் அது பொய்யான ஓர் கருத்தாகும். முதலில் இவ்வாறு கூறி உங்கள் பணத்தை கொள்ளையடிக்கக் காத்திருக்கும் கும்பல்களிடம் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்களின் கற்பனைக்கு மிஞ்சிய ஒரு தொகையினை உங்களால் ஒருபோதும் இணையத்தில் இவ்வாறு இலகுவில் சம்பாதித்துவிட முடியாது.

எதாவது ஒரு இணையதளம் இணையத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி நீங்கள் வேலை செய்ய ஆரம்பிக்கும் முன்னரே அதற்காக உங்களிடம் இருந்து அவர்கள் வழங்கும் சேவைக்காக பணம் அறவிட முற்பட்டால், ஒருபோதும் பணம் செலுத்தாதீர்கள். உண்மையாக இணையவழி வேலைவாய்ப்புக்களை வழங்கும் எந்தவொரு இணையதளமும் இவ்வாறு பணம் அறவிடுவதில்லை. 

உங்களது தனிப்பட்ட தகவல்களை ஒரு இணையதளத்திற்கு வழங்க முன் அவ்விணையத்தளம் போலியானதா இல்லையா என்பதை Google மூலம் ஒருமுறை ஆராய்ந்து பாருங்கள். (இலகு வழிமுறை : <website name> scam? என ஒருமுறை Google இல் search செய்யுங்கள்).

சிலவேளைகளில் இணையத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது ஒரு கடினமான விடயம் எனத் தோன்றினாலும், சரியான வழிமுறைகளைப் பின்பற்றி, அவற்றை கற்று சரியான முறையில் செய்துவந்தீர்கள் என்றால், காலப்போக்கில் இது உங்களுக்கு இலகுவான ஒரு விடயமாக மாறிவிடும்.

எனினும் மேலே கூறியதுபோல் மணிக்கு 100 டாலர்கள் அல்லது  ஒரு நாளைக்கு 1000 டாலர்களை உடனடியாக இணையத்தில் சம்பாதிப்பது என்பது எமது நாடுகளில் நடைமுறையில் இலகுவில் சாத்தியப்படாத விடயமாகும். எனினும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேலை மற்றும் கணனி அறிவினைப் பொறுத்து சாதாரணமாக உங்களால் ஒரு நாளைக்கு கணிசமான வருமானத்தினைப் பெற முடியும்.


How to Work Online?

உங்களாலும் இணையவழி வேலைவாய்ப்பியனை பெற முடியுமா?

ஆம், Online Jobs மற்றும் Online Jobs in Tamil ஆகிய பகுதிகளினூடாக இனையவழி தொழில் வழங்கும் இணையதளங்கள் மற்றும் நிறுவங்களைப் பற்றி  தனித்தனியாக ஆராய்ந்து விரைவில் உங்களுக்கு வழங்கவுள்ளோம்.
Previous Post Next Post