முடிந்தால் கண்டு பிடியுங்கள்..! கண்டுபிடித்தால் நீங்களும் ஓர் IQ ஜீனியஸ் தான்.


முடிந்தால் கண்டுபிடியுங்கள்..! கண்டுபிடித்தால்  நீங்களும் ஓர் IQ ஜீனியஸ் தான்.

ஒரு திருட்டு சம்பவத்தின் போது 4 திருடர்கள் திருடும் முன்னரே போலீசாரிடம் வசமாக மாட்டிக்கொண்டனர்.

இவர்கள் எதையும் திருடவில்லை என்பதால், தாங்கள் செய்ததை மன்னிக்குமாறும், இனிமேல் இவ்வாறு திருடுவதில்லை எனவும், தண்டனைகள் இன்றி தம்மை விடுவிக்குமாறும் இவர்கள் 4 பேரும் நீதி மன்றத்தில் வைத்து நீதிபதியிடம் கெஞ்சினர்.

இதற்கு சம்மதித்த நீதிபதி, "நான் உங்களுக்கு ஒரு சோதனை நடத்துகிறேன், இதில் நீங்கள் வெற்றிபெற்றால் உங்களை நான் விடுவிக்கிறேன் என்றார்." நான்கு திருடர்களும் சம்மதித்தனர்.


சோதனை:

படத்தில் உள்ளவாறு திருடர்கள் நான்கு பேரையும் நிறுத்தி, 4வது திருடன் ஓர் சுவருக்குப் பின்னல் நிறுத்திவைக்கப்பட்டான். பின்பு நான்கு திருடர்களின் தலையிலும் மேற்கண்டவாறு கருப்பு, வெள்ளை நிறத்தில் 4 தொப்பிகள் அணிவிக்கப்பட்டன.

படத்திலுள்ளவாறு நிபந்தனைகள்:
- இவர்களால்  ஒருவரை ஒருவர் திரும்பி பார்க்க முடியாது.
- தொப்பியினை கழட்ட முடியாது.
- 1வது திருடனால் 2வது மற்றும் 3வது திருடனை பார்க்க முடியும்.
- 2 வது திருடனால் 3வது திருடனை மட்டுமே பார்க்க முடியும்.
- 3வது மற்றும் 4வது திருடனால் யாரையும் பார்க்க முடியாது.

பின்பு அவர்களிடம், உங்கள் நால்வருக்கும் 4 தொப்பிகள், 2 கருப்பு மற்றும் 2 வெள்ளை நிறங்களிலான (படத்தில் உள்ளவாறு) தொப்பிகள் அணிவிக்கப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டது. எனினும் யாருக்கு எந்த நிறத்தில் தொப்பி அணிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படவில்லை.

அவர்களுக்கான சோதனை:
நான்கு திருடர்களிலும் யாரேனும் ஒருவர் தான் அணிந்திருப்பது எந்த நிறத்திலான தொப்பி என சரியாகக் கூறிவிட்டால், இவர்கள் நால்வரும் விடுவிக்கப்படுவர். நான்கு திருடர்களிலும் யாராவது ஒருவர் மட்டுமே, அதுவும் ஒருமுறை மட்டுமே தான் அணிந்திருக்கும் தொப்பியின் நிறத்தை கூற அனுமதிக்கப்பட்டனர். இதில் தோல்வியடைந்தால் நால்வரும் சிறைக்கு அனுப்பப்படுவர்.

எனினும் நீதிபதியையும், போலீசாரையும் வியப்பூட்டும் வகையில் இதில் ஒரு திருடன் தான் அணிந்திருக்கும் தொப்பியின் நிறத்தை சரியாக உரத்துக் கூறி, தனது சகாக்கள் நால்வருடனும் விடுதலைபெற்றுச் சென்றான்.

உங்களுக்கான கேள்வி:
இதில் எந்த திருடன் தான் அணிந்திருக்கும் தொப்பியின் நிறத்தை சரியாக் கூறினான்? அவ்வாறு சரியான பதிலை கூற அவனால் எப்படி முடிந்தது?

குறிப்பு: எந்த உதவியும் இன்றி சுயமாகவே சிந்தித்து நீங்கள் இதற்கான சரியான விடையினை கண்டுபிடித்தால் நீங்களும் ஓர் IQ ஜீனியஸ் தான் :)

சரியான விடை இதோ..!

நேற்று கேற்கப்பட்ட இக்கேள்விக்கு 5% இற்கும் குறைவானவர்களே சரியான விடையினை அனுப்பியிருந்தனர். 95% பிழையான விடைகள்.
இதோபோன்ற கேள்விகளே, போட்டிப் பரீட்சைகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கான பரீட்சைகளில் அதிகம் கேற்கப்படுகின்றன.


சரியான விடை:

2வது திருடன்.

காரணம்: 
முதலாவது திருடனால் தன் முன்னாள் அணிந்திருக்கும் இரு திருடர்களின் தொப்பிகளையும் பார்க்க முடிந்ததெனினும், தான் அணிந்திருக்கும் தொப்பி  வெள்ளை நிறமா அல்லது கருப்பு நிறமா என நிச்சயமாகக் கூற முடியாது. ஆகவே அவன் அமைதியாகிறான். 

சற்று நேரத்தில், 2வது திருடன் சிந்திக்கிறான்... தனக்கு முன்னாள் இருப்பவன் அணிந்திருப்பது கருப்பு நிறத்திலான தொப்பி.. தானும் கருப்பு நிறத்தில் தொப்பி அணிந்திருந்தால், 1வது திருடன் அவன் அணிந்திருப்பது வெள்ளை தொப்பி என இலகுவாகக் கூறி இருப்பான். அப்படியென்றால், 1வது திருடனால் அவன் அணிந்திருக்கும் நிறத்தை கூற முடியாமல் போனதற்கான கரணம் 2வது திருடன் அணிந்திருப்பது வெள்ளை நிறத் தொப்பி என்பதால்... முதலாவது திருடனின் அமைதியில் இருந்து இதை கண்டுபிடிக்கும் 2வது திருடன் தான் அணிந்திருப்பது வெள்ளை நிறத் தொப்பி என சரியாக கூறி சகாக்களுடன் விடுதலையாகிச் செல்கிறான்.
Previous Post Next Post