உங்களால் நம்ப முடியாத 05 தொழில்கள்!


உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலும் வாழும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வேண்டி பல்வேறுபட்ட தொழில்களை   செய்துவருகின்றனர். இவற்றில் கடினமான உடல் உழைப்புடன் செய்யும் தொழில்களை போலவே அதிகளவு சிரமங்களின்றி செய்யப்படும் தொழில்களும் உள்ளன. எனினும் இவற்றை தாண்டியும் நாம் நினைத்தும் பார்க்க முடியாதளவிற்கு சில புதுமையான மற்றும் வித்தியாசமான தொழில்களையும் சிலர் செய்துவருகின்றனர். சில வேளைகளில் இவ்வாறான தொழில்கள் மிகவும் கடினமானதாக காணப்படும். இன்னும் சிலர் அவர்களின் தொழிலுக்காக தமது வாழ்வையே அர்பணித்திருப்பார்கள். எனினும் , இவ்வாறான தொழில்களில் ஈடுபடுபவர்களையும் அவர்களின் தொழில்கள் பற்றியும் வெளியுலகிற்கு பெரிதளவில் தென்படுவதுமில்லை.

அவ்வாறான சில தொழில்கள் பற்றி  பார்க்கலாம்...

உங்களால் நம்ப முடியாத விசித்திரமான 05 தொழில்கள்!05. Train Pushers


உண்மையில் யார் இந்த Pushers என்பவர்கள்?

Pushers என்பவர்கள் புகையிரத நிலையங்களில், புகையிரதங்களின் கதவுகளை மூட உதவிபுரிபவர்கள். புகையிரதங்கள் பயணிகளால் நிரம்பி வழியும்போது, உள்ளே இருப்பவர்களையும், வெளியில் இருந்து போகையிரத்தினுள் ஏற முயற்சிப்பவர்களையும் எப்படியேனும் உள்ளே தள்ளி புகையிரத்தின் கதவுகளை மூட உதவி செய்வதுதான் இவர்களது வேலை.

இவ்வாறு பயணிகளை தள்ளும் போது இவர்களுக்கும் பயணிகளுக்கும் இடையில் அடிக்கடி மோதல்களும் ஏற்படுகின்றனவாம். எனினும் இவை எதையும் பொருட்படுத்தாமல் இந்த pushers எனும் தொழில் செய்ப்வர்கள் ஓர் ஆவேசமான போக்கில் தமது வேலையை செய்து முடிப்பார்களாம் . மேலும் சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளில் தான் இதுபோன்ற தொழில் செய்பவர்களை காணமுடிகிறதாம்.

04. உறங்கவைப்பவர்கள் (Professional Sleepers)


உங்களுக்கு தூக்கம் வரும்போது நீங்கள் சாதாரணமாக உறங்கிவிடுவீர்கள். ஆனால் உலகிலுள்ள அனைவராலும் அவ்வாறு சாதாரணமாக உறங்க முடிவதில்லை. காரணம், கடுமையான மன உளைச்சல், இன்சோம்னியா போன்ற தூக்கமே வராத நோய்நிலைமை,மற்றும் உளச்சோர்வு, நீண்ட நாள் தீராத சோகத்தில் ஆழ்த்திருத்தல் போன்ற உளவியல் ரீதியான பிரச்சினைகளில் இருப்பவர்களால் இலகுவில் தூங்க இயலாது. இவர்களில் சிலர் அதிகாலை வேளை வரையும் விழித்தே இருப்பார்கள்.

இவ்வாறான உறங்கவைக்கும் தொழில் செய்பவர்கள் இருப்பதை உங்களால் நம்ப முடிந்தாலும் முடியாவிட்டாலும், உண்மையில் இவ்வாறு தொழில்ரீதியான உறங்கவைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இரவில் தூக்கம் வராதவர்களுக்கு, வைத்தியர்களால் இவ்வாறு தொழில் ரீதியான உறங்கவைப்பவர்களில் ஒருவரை உதவிக்கு அழைக்கப்படுகின்றனர். தொழில் ரீதியாக உறங்கவைக்கும் இத்தொழில் தற்பொழுது உலகளவில் மிகவும் பிரபலமான ஒரு தொழிலாக மாறிவருகிறதாம். இது ஒரு முழு நேர வேலைவாய்ப்பு இல்லை எனினும் இத்தொழிலின் மூலம் குறிப்பிடத்தக்க அளவு வருமானம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறதாம்.

03. Parabolic நிபுணர்கள்.


நீங்கள் ஒரு விண்வெளி வீரராக தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் எவ்வாறு உயிர் வாழ்வது என்பது பற்றி தான். இதுவே ஒவ்வொரு விண்வெளி வீரர்களும் எதிர்நோக்கும் முதல் சவாலாக அமைந்து விடுகிறது. எனவே முற்றுமுழுதாக புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் உயிர்வாழ ஒவ்வொரு விண்வெளி வீரரும் தயார்படுத்தப்படுகிறார். இதற்கான பயிற்சி பெறுவதற்காக அதிக அளவு காலம் தேவைப்படுகின்றது. குறைந்தது ஆறு மாதங்களாவது இதற்கானபயிற்சி ஒரு விண்வெளி வீரனுக்கு வழங்கப்படுகின்றது. 

இவ்வாறு புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் உயிர்வாழ்வதற்கு விண்வெளி வீரர்களை தயார்படுத்தும் இப்பயிற்சியினை எல்லோராலும் வழங்கிட முடியாது அதற்காக இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற Parabolic experts எனப்படும் முக்கிய ஒரு சிலரால் மட்டுமே இப்பயிற்சியினை வழங்க முடிகிறது.

விண்வெளிக்கு சென்று விண்வெளி வீரர்கள் புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் செயற்படும் அளவிற்கு பூமியில் அவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்றால், ஒரு Parabolic experts ஒருவருக்கு இத்துறையில் எவ்வளவு நுட்பமான அறிவு தேவைப்படுகிறது என்பதைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். உண்மையில் இவ்வாறு விண்வெளி வீரர்களை பயிற்றுவிக்கும் Parabolic experts என்பவர்கள் உலகில் வெறும் 9 பேர் மட்டுமே உள்ளனர் என்றால் இத்தொழிலில் ஈடுபடுவதற்கு எவ்வாறான ஒரு திறமை தேவைப்படுகிறது என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது. இதனால் தான் இந்த Parabolic நிபுணர் அல்லது Parabolic experts எனப்படும் தொழிலும் உலகின் புதுமையான தொழில்களில் ஒன்றாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

02. வாசனை சோதனையாளர்கள்


வாசனை திரவியங்களை தயாரிக்கும் சில நிறுவனங்கள், தமது புதிய தயாரிப்புகளின் செயல்திறனை சோதிக்கும் பொருட்டு, தன்னார்வலர்களின் மூச்சு, கால்கள் மற்றும் அக்குள்களின் வாசனையின் தரத்தை கணிக்க வாசனை சோதனையாளர்களை வேலைக்கு அமர்த்தி அவற்றை சோதனை செய்துவருகின்றனர். இவர்களின் துல்லியமான கணிப்பை உறுதி செய்ய மாதம்தோறும் இவர்கள் நுகர்வு சோதனைக்கும் உற்படுத்தப்படுகின்றனர். இதனால் இந்நிறுவனங்களின் தயாரிப்புகளின் தரம் பேணப்படுவதாக அவர்கள் நம்புகின்றனர்.

01. Dog Food Tasters


நாய் உணவாக நாய்களுக்கு வழங்கப்படும் டின் செய்யப்பட்ட இறைச்சி, எலும்புகள் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட புதிய நாய் உணவு தயாரிப்புகளை ருசிப்பதே இந்த Dog food tasters எனப்படும் நாய் உணவு சோதனையாளர்களின் வேலையாகும். இத்துறையில் உள்ள போட்டி நிறுவனங்களை விடவும் தமது தயாரிப்புகளை மேன்படுத்துவதற்கே இவ்வாறு நாய் உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் மனிதர்களை வேலைக்கு அமர்த்தி இதை செய்துவருகின்றனர். 
Previous Post Next Post