ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 25

'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். 

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


He likes to live a luxury life.
அவன் ஆடம்பர வாழ்கை வாழ ஆசைப்படுகிறான்.

She goes to library every week.
அவள் ஒவ்வொரு வாரமும் நூலகத்திற்கு செல்கிறாள்.

He takes medicine 4 times a day.
அவன் ஒரு நாளைக்கு 4 முறை மருந்து சாப்பிடுகிறான்.

Train travels on railway tracks.
புகையிரதம் தண்டவாளத்தில் பயணிக்கிறது.

Manager starts work on time.
முகாமையாளர் நேரத்திற்கு வேலையை துவங்குகிறார்.Soldiers fight for the country.
படை வீரர்கள் தேசத்திற்காக போராடுகின்றனர்.

This bus usually comes late.
இந்த பஸ் வழக்கமாக தாமதமாக வருகிறது.

My mother cooks every day.
எனது தாய் தினமும் சமைக்கிறார்.

They play football on Mondays.
அவர்கள் திங்கட்கிழமைகளில் காற்பந்து விளையாடுகின்றனர்.

This chocolate is very delicious.
இந்த சாக்லேட் மிகவும் சுவையானது.
Previous Post Next Post