ஒரே நேரத்தில் 7 குழந்தைகளை பெற்றெடுத்த ஈராக்கிய பெண்..!


ஈராக்கின் டியாலா எனும் பகுதியில் 25 வயதான ஓர் பெண் ஒரே நேரத்தில் ஏழு குழந்தைகளை பிரசவித்து உலகெங்கிலும் உள்ள ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறியிருக்கிறார்.

இக்குழந்தைகளின் ஓன்று மட்டுமே ஆண் குழந்தையாகும், மற்ற ஆறு குழந்தைகளும் பெண் குழந்தைகளாகும். மேலும் பிரசவத்தின் பின் தாயும் குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பெண்ணுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இத்துடன் அவர்களுக்கு மொத்தம் 10 குழந்தைகள் இருக்கின்றனர்.

ஈராக்கில் இப்படியான சம்பவம் நிகழ்ந்தது இதுவே முதல் தடவையாகும், உலகளவில் இவ்வாறு 7 குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்து ஆரோக்கியமாக இருப்பது இது இரண்டாவது தடவையாகும். இதற்கு முன்னர் 1997 இல் அமெரிக்காவை சேர்ந்த ஓர் பெண் 7 குழந்தைகளை பிரசவித்திருந்தார். அவர்களில் மூவர்பெண்களாகவும், நால்வர் ஆண்களாகவும் இருந்தனர்.

அந்த அமெரிக்காவை சேர்ந்த ஏழு குழந்தைகளினதும் படங்களை கீழே காணலாம்.


Previous Post Next Post