புகையிரத பாதுகாவலர் (Railway Security) - திறந்த போட்டிப் பரீட்சை 2019 : இலங்கைப் புகையிரதத் திணைக்களம்


இலங்கைப் புகையிரதத் திணைக்களத்தின் புகையிரத பாதுகாவலர் சேவையில் புகையிரத பாதுகாவலர் (ஆண்) பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2019.

கல்வித் தகைமைகள்:
கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சையில் சிங்களம்/தமிழ்/ஆங்கில மொழி மற்றும் கணிதம் உட்பட்ட இரண்டு (02) திறமை சித்திகளுடன் ஆறு பாடங்களில் (06) இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாத அமர்வில் சித்திபெற்றிருத்தல் வேண்டும்.

இப்பதவிக்கு இணைத்துக் கொள்வதற்காக தேவைப்படும் தகைமைகள் அனைத்தும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ எல்லா வகையிலும் பூர்த்தி செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

சம்பள அளவு: 41,630/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.06.18

இப்பதவி வெற்றிடங்கள் பற்றிய முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவங்களை 2019.05.17 திகதி வெளியான அரச வர்த்தமானியில் பார்வையிட / தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.



Source - Government Gazette (2019.05.17)

Previous Post Next Post